பொது செய்தி

தமிழ்நாடு

வீராணம் ஏரி முழு கொள்ளளவில் சூழ்ந்தது

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடலூர் : தொடர் மழை காரணமாக, காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியில் இருந்து, உபரி நீர் திறக்கப்பட்டதை அடுத்து, 25க்கும் மேற்பட்ட கிராமங்களை, தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில், நான்கு நாட்களாக பெய்த தொடர் மழையால், வீராணம் ஏரிக்கு, நீர் வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவான, 146.5 கோடி கன அடியில், தற்போது, 140 கோடி கன அடி தண்ணீர்
  வீராணம் ஏரி முழு கொள்ளளவில் சூழ்ந்தது

கடலூர் : தொடர் மழை காரணமாக, காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியில் இருந்து, உபரி நீர் திறக்கப்பட்டதை அடுத்து, 25க்கும் மேற்பட்ட கிராமங்களை, தண்ணீர் சூழ்ந்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில், நான்கு நாட்களாக பெய்த தொடர் மழையால், வீராணம் ஏரிக்கு, நீர் வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவான, 146.5 கோடி கன அடியில், தற்போது, 140 கோடி கன அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால், வீராணத்தில் இருந்து வெள்ளியங்கால் ஓடை மற்றும் வி.என்.எஸ்., மதகு வழியாக, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. வெள்ளியங்கால் ஓடை திறப்பு மற்றும் மனவாய்க்காலில் வரும் நீரால், வீரநத்தம், திருநாரையூர், குமராட்சி உட்பட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களை, தண்ணீர் சூழ்ந்தது.

இதில் வீரநத்தம், சர்வராஜன் பேட்டை கிராமங்கள் முற்றிலும் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குமராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதியில், 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மூழ்கி உள்ளன. நேற்று, மழை குறைந்ததை அடுத்து, தண்ணீர் வடிந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-டிச-201908:25:11 IST Report Abuse
Bhaskaran இன்னும் சென்னை ஏரிகள் நிரம்பவில்லை அதிகம் உள்ள வீராணம் தண்ணீரை கடலுக்கு அனுப்புமுன் சென்னை ஏரிகளில் நிரப்பிக்கொள்ளமுடியாதா விவரமறிந்தவர்கள் பதிலளிக்கலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X