சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

உயர் பாதுகாப்பு வளையத்தில் ஊழல் பேர்வழிகள்!

Added : டிச 03, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
''எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டப் போறாருங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''அவாளுக்கு தான், அரசு சார்புல, மெரினா பீச்ல நினைவிடங்கள் கட்டிண்டு இருக்காளே...'' என்றார், குப்பண்ணா.''நான் சொல்றது, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமாரை... இவர், 'அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்'னு ஒண்ணை நடத்திட்டு இருக்காருங்க... இந்த டிரஸ்ட் மூலமா, பள்ளி
 உயர் பாதுகாப்பு வளையத்தில் ஊழல் பேர்வழிகள்!

''எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டப் போறாருங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''அவாளுக்கு தான், அரசு சார்புல, மெரினா பீச்ல நினைவிடங்கள் கட்டிண்டு இருக்காளே...'' என்றார், குப்பண்ணா.

''நான் சொல்றது, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமாரை... இவர், 'அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்'னு ஒண்ணை நடத்திட்டு இருக்காருங்க... இந்த டிரஸ்ட் மூலமா, பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள்னு குடுத்துட்டு இருக்காருங்க... ''அதோட, மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகுற வகையில, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஏற்பாடு பண்ணிட்டு இருக்காருங்க...

''அடுத்து, இவரது, மதுரை, திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட, டி.குண்ணத்துார்ல, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவுக்கு, டிரஸ்ட் சார்புல மணிமண்டம் கட்ட இருக்காருங்க... இதுக்கு, முறைப்படி அரசிடம் விண்ணப்பிச்சு, அனுமதி வாங்குற வேலையில ஈடுபட்டிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''உள்ளாட்சித் தேர்தல்ல, தி.மு.க., மகளிர் அணிக்கு முக்கியத்துவம் குடுங்கன்னு, கனிமொழி வலியுறுத்தியிருக்காங்க வே...'' என, அடுத்து பேச ஆரம்பித்தார், அண்ணாச்சி.

''உள்ளாட்சிகள்ல தான், மகளிருக்கு, 50 சதவீதம் கொடுக்கணும்னு சட்டமே இருக்கே ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''வாஸ்தவம் தான்... ஆனா, பெரும்பாலான மகளிர் இடங்களை, தி.மு.க., பிரமுகர்களின் மனைவி, மகள்னு குடும்ப உறுப்பினர்களுக்கே குடுத்துடுவாவ... 'இந்த முறை அப்படியில்லாம, மகளிர் அணி நிர்வாகிகளுக்கு சீட் தரணும்'னு, மாவட்டச் செயலர்களிடம் கனிமொழி சொல்லியிருக்காங்க வே...

''அதே மாதிரி, 2016ல உள்ளாட்சி தேர்தல் அறிவிச்சப்ப, சென்னை, கே.கே. நகர் பகுதியில, மூணு வார்டுகளுக்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவங்களுக்கு, சீட் குடுத்தாவ... 'இந்த முறையும் அப்படி குடுக்காம, மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவங்களுக்கும் சீட் தரணும்'னு, அறிவாலயத்துல, அந்தப் பகுதி, தி.மு.க.,வினர் கோரிக்கை வச்சிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''உயர் பாதுகாப்பு வளையத்துல இருக்கோம்னு, காலரை துாக்கி விட்டுக்கிறாங்க பா...'' என, கடைசி தகவலை கையில் எடுத்தார், அன்வர்பாய்.

''யாரைச் சொல்றீங்க...'' என, விசாரித்தார், அந்தோணிசாமி.

''கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., இருக்குதே... இங்க, அனுமதி வழங்குறதுக்கான பைல்கள், அதிகாரிகள் மனசு வச்சா தான், அடுத்த கட்டத்துக்கு நகரும் பா... ''ஒவ்வொரு கட்டத்துக்கும், கணிசமான அளவுல, 'கவனிப்பு' செய்யணும்... சதுர அடிக்கு இவ்வளவு ரூபாய்ன்னு கணக்கு போட்டு, கச்சிதமா வசூல் பண்ணிடுவாங்க பா...

''தினமும், லட்சக்கணக்குல லஞ்சம் புழங்குற இந்த அலுவலகத்தை, ஆறு வருஷமா லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், எட்டிக் கூட பார்த்தது இல்லை... ''அங்க இருக்கிற அதிகாரிகளும், ஊழியர்களும், 'எங்களுக்கு மேல இருக்கிறவங்களின் தயவால, நாங்க பாதுகாப்பா இருக்கோம்... எங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அவ்வளவு சுலபமா நெருங்கிட முடியாது'ன்னு மார் தட்டிக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

நண்பர்கள் நகர, பெஞ்ச் மவுனமானது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
04-டிச-201912:06:41 IST Report Abuse
S.V.SRINIVASAN அமைச்சர் உதயகுமார் செய்து வரும் நல்ல காரியங்களுக்கு வாழ்த்துக்கள். அதே சமயம் MGR, ஜெயலலிதாவின் மணி மண்டபத்திற்கு செலவிடும் பணத்தை வேறு பல நல்ல காரியங்களுக்கு (ஏழை, எளியவர்களுக்கு உதவி ) செய்தால் அவர்கள் இருவருடைய ஆன்மாவும் இவரை வாழ்த்தும்.
Rate this:
Cancel
A R J U N - sennai ,இந்தியா
04-டிச-201908:45:23 IST Report Abuse
A R J U N சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., இருக்குதே... எங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அவ்வளவு சுலபமா...என்னே ஒரு ஆணவம்,இதற்க்கு நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம்,ஈன பிறவிகள்,லஞ்ச ஒழுப்பு துறை இத்தனைதாழ்ந்து ஒக்கும் நிலைமையா,இதன் அதிகாரிகள் இதை பார்த்தும் திருந்த வில்லை எனில் அரசு செத்துவிட்டது எண்டுதான் சொல்லவேண்டு.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-டிச-201906:15:02 IST Report Abuse
D.Ambujavalli சி எம் டி ஏ பக்கம் கண் திரும்பினால் மாட்டக்கூடிய பெரும்புள்ளிகள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கே கணிசமாக ‘ஒதுக்கி’ விட்டால், அவர்களும் ஒதுங்கி போய்விடுவார்களே பாதுகாப்புக் கணக்கிலும் ‘மேலிடம்’ டிமாண்ட் செய்து கணக்கும் நல்ல டீலிங்த்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X