பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.ஐ.டி., மாணவி விவகாரம்

Added : டிச 03, 2019
Advertisement

சென்னை : தற்கொலை செய்த, சென்னை, ஐ.ஐ.டி., மாணவி பாத்திமா லத்தீப், மூன்று பேராசிரியர்களை குற்றம்சாட்டி, மொபைல் போனில், குறுஞ்செய்தி பதிவு செய்தது உண்மை என, தடய அறிவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், பாத்திமா லத்தீப், 21. உயர் கல்வி நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யில், முதுநிலை பட்டப்படிப்பு படித்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், நவம்பர், 9ல், தற்கொலை செய்தார். தன் மொபைல் போனில், 'பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த் பிராமே, ஹேமச்சந்திரன் கராஹ் ஆகியோரே, தனது தற்கொலைக்கு காரணம்' என, பதிவு செய்திருந்தார்.

இது குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார், விசாரித்து வருகின்றனர்.அவர்கள், பாத்திமா லத்தீப்பின், மொபைல் போன், மடிக்கணினி, கையடக்க கணினி மற்றும் இ - மெயில் பதிவுகளை, தடய அறிவியல் துறையினரின் சோதனைக்கு அனுப்பினர். ஆய்வில், தன் மரணத்திற்கு காரணமானவர்கள் என, மூன்று பேராசிரியர்களின் பெயர்களை, பாத்திமா லத்தீப், மொபைல் போனில், குறுஞ்செய்தியாக பதிவு செய்திருந்தது உண்மை என, தெரிய வந்துள்ளது.போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து, முதலில், கோட்டூர்புரம் போலீசாருக்கு தான் தெரிய வந்துள்ளது.

அவர்கள், மாணவியின் மொபைல் போனை கைப்பற்றி, காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். தகவல் அறிந்து, கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு, கேரள மாநில அரசியல் பிரமுகர் ஒருவருடன், பாத்திமாவின் தாய் சுஜித்தா, சகோதரி ஆயிஷா ஆகியோர் வந்துள்ளனர். அப்போது, பாத்திமா லத்தீப்பின் மொபைல் போன், அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. ஆயிஷாவுக்கு, ரகசிய குறியீடு எண் தெரியும் என்பதால், மொபைல் போனை வாங்கி இயக்கியுள்ளார்.

அப்போது தான், பாத்திமா லத்தீப், தன் மரணத்திற்கு காரணமானவர்கள் என, மூன்று பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, குறுஞ்செய்தி பதிவு செய்திருந்தது தெரிய வந்தது. அதை, ஆயிஷா, தன் மொபைல் போனில் படம் எடுத்துள்ளார். அந்த படத்தில் உள்ள, தகவல்கள் தான், சமூக வலைதளத்தில் வெளியாகின. தற்போது, தடய அறிவியல் சோதனையில், அது உண்மை என, உறுதியாகி உள்ளது. இதனால், மாணவி தற்கொலை விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, போலீஸ் வட்டாரங்கள் கூறின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X