பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மாணவர்கள் இலவச விமான பயணம்

Added : டிச 03, 2019
Advertisement

சென்னை : சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சேலத்தில் இருந்து, 38 மாற்றுத்திறனாளிகள், விமானம் வாயிலாக, நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம், நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை, அண்ணா பல்கலை பட்டமளிப்பு நிகழ்ச்சிக்காக, 38 மாற்றுத் திறனாளி மாணவர்கள், சேலத்தில் இருந்து விமானம் வாயிலாக, நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர்.சேலம், தாரமங்கலம் பகுதியை சேர்ந்த, 28 மாற்றுத்திறனாளி மாணவர்கள், அவர்களுக்கு உதவியாக, 10 பேர் என, மொத்தம், 38 பேர், சேலத்திலிருந்து, 'ட்ரூ ஜெட்' விமானத்தில், இலவசமாக அழைத்து வரப்பட்டனர்.

சென்னை வந்த மாணவர்களை, தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணை இயக்குனர் ரவீந்தர்நாத் சிங் வரவேற்று, அண்ணா பல்கலைக்கு அழைத்து சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X