பொது செய்தி

தமிழ்நாடு

'வாங்கிய மை வீணாகி விடுமோ?

Added : டிச 03, 2019
Advertisement

'ஊரக உள்ளாட்சிகளில், ஓட்டுச்சீட்டு வாயிலாகவும், நகர்ப்புறங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாயிலாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது.

அதேநேரத்தில், வாக்காளர்கள் ஓட்டளித்ததை உறுதி செய்வதற்கு, வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில், அழியாத மை வைக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள நிறுவனத்தில் இருந்து, இந்த மை கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு முறை மை வைத்தால், அது மறைவதற்கு குறைந்தபட்சம், இரண்டு மாதங்களாகும். குறைந்த நாட்களில், அந்த மை காலாவதி ஆகிவிடும். கடந்த, 2016ல் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு, அழியாத மை கொள்முதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தாததால், அந்த மை வீணாகி விட்டது. தற்போது, ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடப்பதற்கு, குறைந்த அவகாசமே இருப்பதால், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்டு மாநில தேர்தல் ஆணையம் மை கொள்முதல் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கால் தேர்தல் நடக்காமல் போனால், இந்த மை மீண்டும் வீணாகி விடும் என்பதால், ஆணைய அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X