பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்'தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஜாமின்

Added : டிச 03, 2019
Share
Advertisement
தேனி : 'நீட்'தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தர்மபுரி மாணவரின் தந்தைக்கு ஜாமின் வழங்கி தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது. 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யா உட்பட மாணவர்கள், அவர்களது பெற்றோர் என 10 பேரை தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாணவர்களுக்கு ஜாமின் வழங்கியது. மாணவர்களின் பெற்றோர்டாக்டர் வெங்கடேஷ், டேவிஸ்,

தேனி : 'நீட்'தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தர்மபுரி மாணவரின் தந்தைக்கு ஜாமின் வழங்கி தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது.

'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யா உட்பட மாணவர்கள், அவர்களது பெற்றோர் என 10 பேரை தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாணவர்களுக்கு ஜாமின் வழங்கியது. மாணவர்களின் பெற்றோர்டாக்டர் வெங்கடேஷ், டேவிஸ், சரவணன் உள்ளிட்டவர்களுக்கு தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்த தர்மபுரிஅரசு மருத்துவக்கல்லுாரி மாணவர் முகமது இர்பானின் தந்தை முகமது ஷபி சார்பில், தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு, தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்றுவிசாரணைக்கு வந்தது. அவருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X