கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஐ.ஐ.டி., மாணவர்கள் மரணம் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

Added : டிச 03, 2019
Advertisement

சென்னை : சென்னை ஐ.ஐ.டி.,யில், ௧௪ மாணவர்கள் மரணம் அடைந்தது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கின் தீர்ப்பை, உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பாத்திமா, சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்தார்; விடுதி அறையில், கடந்த, ௯ல் இறந்து கிடந்தார். சந்தேக மரணம் என, கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.இதையடுத்து, தேசிய மாணவர் அமைப்பின் தலைவர் அஸ்வத்தாமன் தாக்கல் செய்த மனுவில், 'பாத்திமா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது தந்தை கூறியுள்ளார். அவரது மொபைல் போனில், தற்கொலை குறிப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

'மாநில போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான, 'பெஞ்ச்' தீர்ப்பை தள்ளி வைத்தது. இதற்கிடையில், கேரளாவை சேர்ந்த, முகமது சலீம் தாக்கல் செய்த, பொதுநல மனு:சென்னை ஐ.ஐ.டி.,யில், ௨௦௦௬ முதல் தற்போது வரை, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான் உட்பட வேறு மாநிலங்களைச் சேர்ந்த, ௧௪ மாணவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு, ஆசிரியர்களின் துன்புறுத்தலே காரணம். ஜாதி, மதம், மொழி பாகுபாடு காட்டப்படுகிறது.

ஐ.ஐ.டி.,யில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பிலும் நடந்த வாதங்களுக்கு பின், மனுவின் உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X