சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : டிச 03, 2019
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'எப்படியோ, தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், இலவசமாக கிடைக்கும் விளம்பரத்தை ஏன் விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான், இந்த முடிவா...' என, கேட்கத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: கிராமங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்த அறிவிப்பு வௌயிட்டுள்ளதன் மூலம், பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, உள்ளாட்சி தேர்தலை, தமிழக தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. எனினும், வரவிருக்கும் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும்.

'இந்த தகவலை, தி.மு.க., வுக்கு தெரிவித்தால், அந்த கட்சித் தலைவர்கள் சந்தோஷப்படுவர்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி: முன்னாள் முதல்வர், ஜெ., ஆட்சியில் இருந்த போது, 'சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் எதுவும், பஞ்சமி நிலங்கள் இல்லை' எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, தி.மு.க., கட்சி பத்திரிகை, 'முரசொலி' அமைந்துள்ள இடம், பஞ்சமி நிலமாக இருக்க முடியாது.

'இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும் பெரிய அளவில் ஒன்றும் நடக்காது போலிருக்கிறதே நிலைமை...' என, கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேட்டி:பழைய கம்யூனிஸ்ட்களான நான், சங்கரய்யா, பாண்டியன் ஆகிய மூன்று பேர் தான், உயிருடன் உள்ளோம். நாங்கள் வேறு வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், 'நம் கம்யூனிஸ்ட் கட்சி' என்று தான் பேசிக் கொள்வோம். எனவே, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய நிலை வந்துள்ளது; ஒன்றிணைய வேண்டும்.

'அதுபோன்ற நிலை, இப்போது ஏற்படாது. ஏனெனில், அமைதி கட்சியான, அ.தி.மு.க., அல்லவா ஆட்சியில் இருக்கிறது...' என, கிண்டலாகக் கூறத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: கடந்த, 2006ல், தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி தேர்தலின் போது, அக்கட்சியினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்; அ.தி.மு.க.,வினர் தாக்கப்பட்டனர். அண்ணாதுரை சிலை முன் கூடி, நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதையடுத்து, 99 வார்டுகளில் மறுதேர்தலுக்கு, கோர்ட் உத்தரவிட்டது.

'அவரிடம் கேட்டால், 'ஜான் பாண்டியன், எங்கள் ஜாதியை சேர்ந்தவர் இல்லை' என்பார். இப்படித் தானே, நீண்ட காலமாக நடக்குது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஏனெனில், அவர் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதை கூறவே, போராடிக் கொண்டிருக்கிறார்.

'எல்லா பிரச்னைக்கும், இது போன்ற, 'ரெடிமேட்' பதிலையே வைத்துள்ளீர்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை:உள்ளாட்சிகள் அனைத்திற்கும் தேர்தல் நடத்தப்படாமல் வெளியாகியுள்ள அறிவிப்பு, உள்நோக்கம் கொண்டதாக உள்ளது; இது, திட்டமிட்ட ஏமாற்று வேலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X