ஜூன், 1ம் தேதி முதல் ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம்

Added : டிச 03, 2019
Advertisement

புதுடில்லி : ''ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம், அடுத்த ஆண்டு ஜூன், 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்,'' என, மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது: 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை, அடுத்த ஆண்டு, ஜூன், 1ம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேலைக்காக இடம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், கடைநிலை ஊழியர்கள், வேலைக்காக அடிக்கடி தங்கள் இடத்தை மாற்றும் ஊழியர்கள் ஆகியோர், இந்த திட்டத்தால் பெரிதும் பயன் அடைவர்.

மேலும், இந்த திட்டத்தால், தகுதியுள்ள பயனாளிகள், நாட்டில் எந்த ரேஷன் கடையிலும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தங்களுக்கு உரிய உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.பயனாளிகளின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க, ஒவ்வொரு கடையிலும், ஆதார் அடையாள அட்டையும், 'பயோமெட்ரிக்' முறையும் பயன்படுத்தப்படும். இதற்காக அனைத்துக் கடைகளும், 'ஆன்லைன்' மூலம் இணைக்கப்படும்.இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு, தேவையான செயல்திட்டத்தை உருவாக்க, இந்தியத் தர நிர்ணய நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.

சர்வதேச தரத்துக்கு நிகரான வழிகளை, இந்திய தர நிர்ணய ஆணையம் ஆய்வு செய்யும். இவ்வாறு, ராம் விலாஸ் பஸ்வான் கூறினார்.4 மருத்துவ கருவிகளுக்கு விலை நிர்ணயம் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில், நான்கு முக்கிய மருத்துவ கருவிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. அதற்கு அதிகபட்ச விலையை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.லோக்சபாவில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: மக்களின் நலன் கருதி, அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில், நான்கு முக்கிய மருத்துவ கருவிகளை, அரசு சேர்த்துள்ளது.

இதயநோய், 'ஸ்டென்ட்'கள், மருந்து நீக்கும் ஸ்டென்ட்கள், ஆணுறைகள் மற்றும் கருப்பை சாதனங்கள் ஆகியவை, அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதிகளவில் பயன்படுத்தப்படும் இந்த சாதனங்களை, அதிக விலைக்கு விற்பதை தடுக்கும் நோக்கில், இந்த சாதனங்களுக்கு, விலை உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X