சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'டவுட்' தனபாலு

பத்திரிகை செய்தி: 'காங்கிரசை சேர்ந்த, மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், சிறையில் அடைக்கப்பட்டு, 100 நாட்கள் ஆகி விட்டன. அவரை உடனடியாக விடுவிக்க, கோர்ட் உத்தரவிட வேண்டும். தங்களுக்கு எதிரானவர்களுக்கு, தொல்லை கொடுக்கும் வகையிலேயே, மத்திய அரசு, அவரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது' என, காங்., அழகிரி கண்டனம்.

'டவுட்' தனபாலு: ஏதோ, சினிமா படம், 100 நாட்கள் ஓடியது போல அல்லவா, நீங்கள் கூறுவது இருக்கிறது... 100 நாட்கள் ஒருவரை, சிறையில் அடைத்துள்ளனர் என்றால், ஆதாரம் இல்லாமல் செய்ய முடியுமா. இது, கோர்ட் உத்தரவு தானே தவிர, மத்திய அரசின் முடிவல்ல. இதன் மூலம், அவரை வெளியே கொண்டு வர, திறமையாக வாதாட, காங்கிரசில் வழக்கறிஞர்கள் இல்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.

***

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு எடுபிடியாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளங்குகிறார். அவர் தலைமையில் இயங்கும், மாநில தேர்தல் ஆணையம், பச்சோந்தியாக மாறிவிட்டது. எந்த விதிகளையும் கடைப்பிடிக்காமல், ஊரக பகுதிக்கு மட்டும் தேர்தலை அறிவித்துள்ளது. இது, கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க., அரசின் முகத்தில் கரி பூசப்படும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதை கேட்டு, உங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, மாநில தேர்தல் ஆணையர் நடந்திருந்தால், அவரை, 'தி.மு.க.,வின் செல்லப்பிள்ளை, உண்மை விசுவாசி, நியாயமான அதிகாரி' என, புகழ்ந்திருப்பீர்கள். அவ்வாறு நீங்கள் புகழ்ந்திருந்தால், அந்தப் பதவியிலிருந்து அவரை, அ.தி.மு.க., அரசு துாக்கி அடித்திருக்கும் என்பது, 'டவுட்' இல்லாமல் எல்லாருக்கும் புரியும்!

***

தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி: நான் முதலில், பேரூராட்சி தலைவராகத் தான் இருந்தேன். அதற்குப் பின், சட்டசபை தேர்தலில் போட்டியிட, ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். அவர் தான் என்னை, உள்ளாட்சி துறைக்கு அமைச்சராகவும் ஆக்கினார். நான் இப்போது, அமைச்சராக இருக்க காரணம், அம்மா தான்.

'டவுட்' தனபாலு: நீங்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள், அவரவர் பதவியில் இருக்க காரணம், ஜெயலலிதா தான். இது, தமிழக மக்களுக்கு, 'டவுட்' இல்லாமல் நன்றாக தெரியும். அதுபோல, தி.மு.க.,வை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்ததும், ஜெ., தான் என்பது, அவர்களுக்கும், 'டவுட்' இல்லாமல் விளங்கும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-டிச-201906:07:15 IST Report Abuse
D.Ambujavalli 100 நாட்களில், முறையான ஆதாரங்களைக் காட்டி, குற்றப் பத்திரிகை பதிவு செய்யக்கூட முடியாத சி பி ஐ, அமலாக்கத்துறைகள், கைதில் மட்டும் பறந்து பறந்து வேலை செய்வார்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X