பொது செய்தி

இந்தியா

கழிவுநீர் கடலில் கலப்பு தடுக்க தீர்ப்பாயம் உத்தரவு

Added : டிச 03, 2019
Advertisement

புதுடில்லி : தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவு நீர் கடலில் கலப்பதை தடுக்க, மேற்கொள்ள வேண்டிய திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

'சமீபகாலமாக, கடல் நீரில், கழிவு நீரும், தொழிற்சாலை கழிவுகளும் அதிக அளவில் கலக்கின்றன. 'இதனால், கடல் வளம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சர்வதமான் சிங் என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, பசுமை தீர்ப்பாய தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தீர்ப்பாய தலைவர் உத்தரவிட்டதாவது:கடலில், கழிவு நீரும், தொழிற்சாலை கழிவுகளும் கலப்பதை தடுக்க, எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து, தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட கடலோர மாநில அரசுகள், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர யூனியன் பிரதேச அரசுகள், ஒரு திட்டத்தை தயாரிக்க வேண்டும். இது குறித்த திட்ட அறிக்கையை, ஒரு மாதத்துக்குள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்காத மாநில அரசுகளுக்கு, அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, மாதந்தோறும், 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X