அந்தமான் கடல் பகுதியில் சீன கப்பல் விரட்டியடிப்பு

Added : டிச 03, 2019
Advertisement
 அந்தமான் கடல் பகுதியில் சீன கப்பல் விரட்டியடிப்பு

புதுடில்லி : அந்தமான் அருகே, கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த சீன கப்பலை, நம் கடற்படை கப்பல்கள் விரட்டியடித்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த, சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில், அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு அருகே, கடல் பகுதியில், சீன கப்பல் ஒன்று நீண்ட நேரமாக நின்றதை, இந்திய கடற்படை ஹெலிகாப்டர்கள் கண்காணித்தன. ஷி யான் - 1 என்ற அந்த கப்பலில் இருந்தவர்கள், ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய கடற்பகுதியில், எந்தவித அனுமதியும் இன்றி, அன்னிய நாட்டு கப்பல் ஆய்வுப் பணியில் ஈடுபடுவதை, பாதுகாப்பு கருதி, மத்திய அரசு அனுமதிப்பது இல்லை. இதையடுத்து, இந்திய கடற்படை கப்பல்கள், சீன ஆய்வுக் கப்பலை நெருங்கின. உடனடியாக, இந்திய கடற்பகுதியை விட்டு வெளியேறும்படி, கடற்படை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, சீன கப்பல், இந்திய கடற்பகுதியை விட்டு வெளியேறியது. கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:ஆய்வுப் பணி என, சீன தரப்பில் கூறப்பட்டாலும், இந்திய கடற்பகுதியை உளவு பார்ப்பதற்காக கூட, அவர்கள் வந்திருக்கலாம். இதனால் தான், அந்த கப்பல், அங்கிருந்து துரத்தப்பட்டது. சமீபத்தில், சீனாவுக்கு சொந்தமான, ஏழு போர்க்கப்பல்கள், இந்திய பெருங்கடல் பகுதி அருகே சுற்றிந் திரிந்ததை, நம் கடற்படையினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


குறைவான நிதி


தளபதி கவலை இந்திய கடற்படை தினத்தையொட்டி, டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி கரம்பீர் சிங் கூறியதாவது:எந்தவிதமான அச்சுறுத்தலையும் முறியடிக்க இந்திய கடற்படை தயாராக உள்ளது. சீன ஆய்வு கப்பல், இந்திய கடற்படையின் தீவிர கண்காணிப்பின் காரணமாக, அந்தமான் கடல் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இது போன்ற முயற்சிகளை தடுக்க, கடற்படை, எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்படும்.

எப்படியாவது, மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் நம்மிடம் இருக்க வேண்டும் என்பது தான், கடற்படையின் நீண்ட கால விருப்பம். முதல் முறையாக, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்படும் விமானம் தாங்கி கப்பல், வரும், 2022க்குள் தயாராகி விடும். கடந்த, 2012 - 13ம் ஆண்டில், கடற்படைக்காக, 18 சதவீத நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, 13 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது; இது, கவலை அளிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு கருதி, கடற்படைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X