கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மறைமுக தேர்தலை எதிர்த்து வழக்கு விசாரணை 17க்கு தள்ளிவைப்பு

Added : டிச 03, 2019
Advertisement

சென்னை : மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணையை, வரும், ௧௭ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.சென்னையை அடுத்த, கிழக்கு இரும்புலியூரைச் சேர்ந்த, புலவர் யேசுமணி தாக்கல் செய்த மனு:மாநகராட்சி, நகராட்சிகளில், மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. ௨௦௧௯ நவ., ௧௯ல், இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., என, இரண்டு அரசியல் கட்சிகளும், மாறி மாறி ஆட்சி செய்கின்றன.இந்த கட்சிகளின் வசதிகளுக்கு ஏற்ப, மேயர் மற்றும் தலைவர் தேர்தல் நடைமுறையில் மாற்றம் செய்யப்படுகிறது.

ஆளும் கட்சியின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது; இது, சட்டவிரோதமானது. எனவே, இதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசியல் ஆதாயத்துக்காக, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 'மறைமுக தேர்தல், இதற்கு முன்னும் நடந்துள்ளது; அவசர சட்டத்தை எதிர்ப்பதற்கான சட்டப்படியான காரணங்களை தெரிவிக்கவில்லை' எனக் கூறிய நீதிபதிகள், கூடுதல் மனு தாக்கல் செய்ய அனுமதித்து, விசாரணையை, வரும், ௧௭க்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X