சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

12 வயது முதல் படங்களில் பணியாற்றுகிறேன்!

Added : டிச 03, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சினிமா இசைத் துறையில், 45 ஆண்டுகளாக இருக்கும், இசைஅமைப்பாளர் வித்யாசாகர்: நான், 1975ல் இருந்து, பல இசைஅமைப்பாளர்களுக்கு, 'கிதார், கீ - போர்டு' போன்ற இசைக் கருவிகளை வாசித்துள்ளேன். கிழக்கே போகும் ரயில் படத்தில், இசைக் கலைஞனாக நான் பணியாற்றிய போது எனக்கு வயது, 12. ராபர்ட் - ராஜசேகர் இரட்டையர்கள் இயக்கிய, பாலைவனச் சோலை படத்தின் இசைக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன்;
 12 வயது முதல் படங்களில் பணியாற்றுகிறேன்!

சினிமா இசைத் துறையில், 45 ஆண்டுகளாக இருக்கும், இசைஅமைப்பாளர் வித்யாசாகர்: நான், 1975ல் இருந்து, பல இசைஅமைப்பாளர்களுக்கு, 'கிதார், கீ - போர்டு' போன்ற இசைக் கருவிகளை வாசித்துள்ளேன். கிழக்கே போகும் ரயில் படத்தில், இசைக் கலைஞனாக நான் பணியாற்றிய போது எனக்கு வயது, 12. ராபர்ட் - ராஜசேகர் இரட்டையர்கள் இயக்கிய, பாலைவனச் சோலை படத்தின் இசைக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன்; அவர்களுடன் நல்ல பழக்கம் உண்டு. அதனால், பறவைகள் பலவிதம் என்ற படத்தில், பின்னணி இசை அமைக்கும் வாய்ப்பை கொடுத்தனர்.

அதன் பிறகு, பல தமிழ் படங்களுக்கு இசையமைத்தேன். அதன் பின், தெலுங்கு படவுலகிற்குள் சென்று விட்டேன். மீண்டும் தமிழுக்கு வந்தது, அர்ஜுன் நடித்த, ஜெய் ஹிந்த் படம் மூலம் தான்.அந்தப் படத்திற்கு, 'மலரே மவுனமா...' என்ற பாடலை உருவாக்கினேன்; ஆனால், அர்ஜுனின், கர்ணா படத்தில் தான், அந்தப் பாடலை அவர் பயன்படுத்தினார்.அந்தப் பாடலை, எஸ்.பி.பாலசுப்ரமணியமும், ஜானகியும் பாடினர். அப்போதே அவர்கள், 'இது, குறிஞ்சி மலர் போன்றது; காலம் காலத்திற்கும் நிற்கும்' என்றனர். அதுபோல, அந்தப் பாடல் இப்போதும் ரசிகர்கள் மனதில் நிற்கிறது.

இயக்குனர் ஸ்ரீதரின், இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் ஆர்கெஸ்ட்ராவில் இடம் பெற்றிருந்தேன். அந்தப் படத்தின் உதவி இயக்குனராக இருந்தவர், பி.வாசு. அப்போதிலிருந்து, வாசுவுக்கும், எனக்கும் நட்பு உண்டு. அவர் இயக்கிய, சந்திரமுகி படத்தில், வாய்ப்பு வழங்கினார். அதில் இடம்பெற்ற தெலுங்கு பாடலான, 'ரா... ரா...' என்னை உச்சத்துக்கு கொண்டு சென்றது.இப்போதைய இயக்குனர்கள் சுந்தர்.சி,தரணி, பழ.பழனியப்பன், ரமணா என, பலரின் படங்களுக்கு இசையமைத்து உள்ளேன்.

அதுபோல, கே.விஸ்வநாத், கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகியோருடனும் பணியாற்றியுள்ளேன். சிவாஜி கணேசனுடன், பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளேன். தமிழ் சினிமாவின் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள், திரும்ப திரும்ப ஒரே விஷயத்தையே செய்து கொண்டுள்ளனர்; அது தான் என் ஸ்டைல் என, புதுப் பெயரையும் வைத்துக் கொள்கின்றனர். அந்தப் பாடல்களை, ஒன்றிரண்டு முறை தான் கேட்க முடியும். கொஞ்ச நாட்கள் கழித்தே கேட்க முடியாத அளவிற்கு தான் உள்ளன. அதுபோல, பாடகர்கள், எஸ்.பி.பி., யேசுதாஸ், மனோ, ஜானகி, சித்ரா, சொர்ணலதா போன்றோரின் குரலில் தனித்தன்மை இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் பாடகர்களின் குரல்களில், தனித்தன்மை, 'மிஸ்சிங்!'

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
04-டிச-201910:21:19 IST Report Abuse
ganapati sb இளையராஜாவுக்கு அடுத்த அற்புதமான இசை அமைப்பாளர் வித்யாசாகர் மலரே மவுனமா, பூவாசம் புலப்படும் அன்பே என மெலடி என்றாலும் தேவுடா தேவுடா , தேரடி வீதியில் தேவதை என குத்துப்பாட்டு என்றாலும் தனித்தன்மை கொண்டு இசை அமைவார் தொடரட்டும் அவரின் இசை சேவை
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
04-டிச-201909:46:24 IST Report Abuse
ஆரூர் ரங் தந்தை மொழியான தெலுகுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை தாய்மொழி தமிழுக்கும் கொடுத்திருக்கலாம்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
04-டிச-201904:14:41 IST Report Abuse
meenakshisundaram இவரின் திறன் சரியாகப் பயன் படுத்தப்பட வில்லை .அன்பே சிவம் -இன்றும் இவரின் இசை நிற்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X