பொது செய்தி

இந்தியா

12 வயதில் 10ம் வகுப்பு தேர்வு; சாதிக்க துடிக்கும் மணிப்பூர் சிறுவன்

Updated : டிச 04, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (2)
Advertisement
12 வயதில் 10ம் வகுப்பு தேர்வு; சாதிக்க துடிக்கும் மணிப்பூர் சிறுவன்

இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில், 12 வயது சிறுவனுக்கு, 'ஐ.க்யூ' எனப்படும் நுண்ணறிவுத் திறன் அதிகமுள்ளதால், 10ம் வகுப்பு தேர்வு எழுத, அம்மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது.

மணிப்பூரில், சுர்சந்திர பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன், ஐசக் பலுங்குமான்; வயது, 12. அதிக நுண்ணறிவுத் திறன் உள்ளதால், இந்த வயதில், 10ம் வகுப்பு படிக்கிறான். அடுத்த ஆண்டு, பொதுத் தேர்வு எழுத உள்ளான். மணிப்பூர் கல்வி வாரிய விதிமுறைப்படி,15 வயதிற்கு உட்பட்டவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத முடியாது. அதனால், ஐசக்கின் தந்தை, தன் மகன், 10ம் வகுப்பு தேர்வு எழுத, சிறப்பு அனுமதி தருமாறு, அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, ஐசக்கின் நுண்ணறிவுத் திறனை சோதிக்க, அரசு உத்தரவிட்டது. அதில், 17.5 வயதினருக்கான நுண்ணறித் திறன், ஐசக்கிடம் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஐசக், 2020ல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத, மணிப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், மிக இளம் வயதில், இத்தேர்வு எழுதும் சிறுவன் என்ற சிறப்பை, ஐசக் பெற உள்ளான்.

ஐசக் கூறியதாவது: ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றாக தேர்வு எழுதுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் புதிய சாதனையை நிகழ்த்துவேன். அடுத்து, மிக இளம் வயதில், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதி சாதனை நிகழ்த்துவேன். இவ்வாறு, ஐசக் கூறினான்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
04-டிச-201911:48:07 IST Report Abuse
pradeesh parthasarathy வாழ்த்துக்கள் ....
Rate this:
Share this comment
Cancel
04-டிச-201908:14:42 IST Report Abuse
ருத்ரா Great dear. Happy to hear.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X