ரூ.170 கோடி, 'ஹவாலா' காங்.,குக்கு, 'நோட்டீஸ்'

Added : டிச 03, 2019
Advertisement

புதுடில்லி : தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து, 170 கோடி ரூபாய் ஹவாலா பணம், நன்கொடையாக பெற்றது குறித்து விளக்கம் அளிக்க, காங்., கட்சிக்கு, வருமான வரித் துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

ஹவாலா மோசடி குறித்து, வருமான வரித் துறை, கடந்த சில மாதங்களாக, நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டது. டில்லி, மும்பை, ஐதராபாத், புனே, ஆக்ரா, கோவா மற்றும் தமிழகத்தின் ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. குறிப்பாக, சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தது. பொய் கணக்கு, போலி பில்கள் என பல வகைகளில் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐதராபாதைச் சேர்ந்த ஒரு நிறுவனம், காங்., கட்சிக்கு, 170 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, காங்., கட்சிக்கு, வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதேபோல், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு முக்கிய நபர், 150 கோடி ரூபாய் பெற்றுள்ளது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X