'சிறப்பு அந்தஸ்து நீக்கம் போல் குடியுரிமை மசோதாவும் முக்கியம்'

Updated : டிச 04, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (5)
Advertisement
சிறப்பு அந்தஸ்து நீக்கம், பார்லிமென்ட், குடியுரிமை மசோதா,மத வேறுபாடு,  சட்ட திருத்த மசோதா

புதுடில்லி: ''ஜம்மு - காஷ்மீருக்கு, 370வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது போல், பார்லிமென்டில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதும் மிகவும் முக்கியமானது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் டில்லியில், பா.ஜ., - எம்.பி.,க்கள் கூட்டம் நேற்று நடந்தது.


முக்கியத்துவம்:

இதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்றுவதில், அரசு உறுதியாக உள்ளது. ஜம்மு - காஷ்மீரில், 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது போல், இந்த மசோதாவை நிறைவேற்றுவதும் மிகவும் முக்கியம். அதனால், பா.ஜ., - எம்.பி.,க்கள் அனைவரும் தவறாமல், பார்லி., கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். குடியுரிமை மசோதா மீது நடக்கும் விவாதத்தில் பங்கேற்று, அரசின் நிலைமையை வலிமையாக எடுத்துரைக்க வேண்டும்.

அதேபோல, காங்கிரஸ் கட்சியினரை போல், நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல், கவுரவமாக பேச வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கும், மக்களின் நலனுக்கும் தான், பா.ஜ., எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.


பொய் பிரசாரம்:

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய மூன்று அண்டை நாடுகளுமே, முஸ்லிம் நாடுகள் தான். அதனால், அங்கு மத வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், முஸ்லிம் அல்லாதவர்களாக தான் இருக்க முடியும். அதனால் தான், இந்த நாடுகளிலிருந்து வெளியேறி, இந்தியாவுக்குள் குடியேறிய முஸ்லிம்கள் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இது, மதச்சார்பின்மைக்கு எதிரானது என, எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன. இதனால், அசாம் உட்பட வட கிழக்கு மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு, ராஜ்நாத் சிங் கூறினார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், ''கர்ப்பிணிகளிடம் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.''இது தொடர்பாக மாதந்தோறும், 3.5 லட்சம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya ,இந்தியா
04-டிச-201919:22:25 IST Report Abuse
Rajan அப்படியே அவனுங்களுக்கு குடும்ப கட்டு பாடு பண்ணிவிடுங்க எஜமான்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
04-டிச-201909:41:38 IST Report Abuse
ஆரூர் ரங் ஆமாம் இந்து நாடு எனும் அறிவிப்பின் முன்னோட்டம்தான்
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
04-டிச-201909:06:19 IST Report Abuse
GMM தேசிய குடியுரிமை மசோதா அவசியம். ஆப்கான், வங்களாதேஷ், பாகிஸ்தான் முன்பு இந்திய பகுதிகள், இப்போது இஸ்லாமிய நாடுகள். இங்கு வாழும் இந்து, பார்சி, புத்த, ஜெயின், சீக்கிய மக்களுக்கு முன்னோர்கள் இந்திய மக்கள். இந்திய குடியுரிமை எப்போதும் பெறலாம். உள்நாட்டு தேச விரோத கும்பல் அரசியல் அதிகாரம் பெறாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஊடுருவிய இஸ்லாம் மக்களுக்கு நாடுகள் இருபதால், அவர்கள் தாய் நாட்டுக்கு அனுப்ப வேண்டும். மத மாற்றம் புரிய உலகில் இருமதங்கள் அதிக முயற்சி செய்து வருவதால், உலக நாடுகள் தன் கலாச்சாரம் காக்க திட்டம் வகுக்க தொடங்கி விட்டன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X