கூட்டணிக்கு வாய்ப்புள்ளது!

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
கர்நாடகாவில், 15 சட்டசபை தொகுதிகளுக்கு, நாளை நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், ஓட்டுப்பதிவுக்கு பிறகான கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை என உறுதியாக கூற முடியாது. ஒருவேளை பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து, ஆட்சியை கைப்பற்றுவது குறித்து, காங்., மேலிடம் முடிவு செய்யும். சித்தராமையா , சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்,
கூட்டணிக்கு வாய்ப்புள்ளது!


கர்நாடகாவில், 15 சட்டசபை தொகுதிகளுக்கு, நாளை நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், ஓட்டுப்பதிவுக்கு பிறகான கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை என உறுதியாக கூற முடியாது. ஒருவேளை பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து, ஆட்சியை கைப்பற்றுவது குறித்து, காங்., மேலிடம் முடிவு செய்யும்.
சித்தராமையா , சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்விற்பனையில் வல்லவர்கள்!

நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் ரயில்வே துறையை, மிக மோசமான நிலைக்கு, பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ளது. இன்னும் சில நாட்களில், மற்ற அரசு நிறுவனங்களைப் போல, ரயில்வே துறையையும், மத்திய அரசு விற்பனை செய்ய துவங்கும். பா.ஜ., அரசை பொறுத்தவரை, எதையும் உருவாக்குவதை விட, விற்பனை செய்வதில், வல்லவர்களாக உள்ளனர்.
பிரியங்கா , பொதுச் செயலர், காங்கிரஸ்
கடவுள் தான் காப்பாற்றணும்!
ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என, பா.ஜ., - எம்.பி., கூறுகிறார். தனிப்பட்ட வரி விதிப்புகளை ரத்து செய்யவும், இறக்குமதி வரிகளை அதிகரிக்கவும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இவை தான், பா.ஜ., அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள். இந்திய பொருளாதாரத்தை, கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
சிதம்பரம் , முன்னாள் நிதி அமைச்சர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
04-டிச-201916:25:19 IST Report Abuse
Pannadai Pandian why this criminal who is just out of jail speaks ??? To hide people's impression of being a criminal, talks about economy and other things......nonsense....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X