எஸ்பிஜி சட்டத்தால் பாதிக்கப்படுவது பிரதமர் மட்டுமே: அமித் ஷா

Updated : டிச 04, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (8+ 60)
Advertisement
எஸ்பிஜி , மோடி, பாதிப்பு,தீவிர பாதுகாப்பு , அமித்ஷா,

புதுடில்லி: ''எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை, பாதுகாப்பு திருத்த சட்டத்தால் பாதிக்கப்படப் போவது, பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே,'' என, பா.ஜ., தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறினார்.

எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதாவை, மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இது, லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேறியுள்ளது. இந்த நிலையில், ராஜ்யசபாவில் நேற்று இதன் மீது விவாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து, இந்த மசோதா நிறைவேறியது.


பழிவாங்கும் வகை:

இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:பாதுகாப்பு தொடர்பான இந்த மசோதாவில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு மட்டுமல்ல, நாட்டில் உள்ள, 130 கோடி மக்களின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம்.அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மறுக்கிறேன். இதற்கு முன், காங்கிரஸ் தான் இது போன்று பழிவாங்கும் வகையில் ஈடுபட்டுள்ளது.

முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்ம ராவ், ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், எச்.டி.தேவ கவுடா மற்றும் சமீபத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் பாதுகாப்பு மாற்றப்பட்டபோது, அது குறித்து எந்தப்பிரச்னையும் எழுப்பவில்லை.ஆனால், ஒரு குடும்பத்துக்கான பாதுகாப்பு மாற்றப்பட்டதை பிரச்னையாக்குகின்றனர். பாதுகாப்பு என்பது, ஒருவருக்கு சமுதாயத்தில் கிடைக்கும் அடையாளம் இல்லை. எஸ்.பி.ஜி., பாதுகாப்பு என்பது பிரதமருக்கு மட்டுமே இருக்க வேண்டும்; மற்றவர்களுக்கு கிடையாது.

ஒரு நபருக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து தான் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த சட்டத்தின்படி, அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்தில் வசிக்கும் பிரதமர் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு மட்டுமே, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வழங்கப்படும். பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, அரசு இல்லத்தில் வசிக்கும் முன்னாள் பிரதமர் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்படும். அதன்படி பார்த்தால், இந்த சட்டத்தால் பாதிக்கப்படப்போவது, பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே.


பிரியங்கா பாதுகாப்பு:

காங்., பொதுச் செயலர் பிரியங்காவின் வீட்டில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். உண்மையில், அவருடைய சகோதரரும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல், கறுப்பு நிற, 'டாடா சபாரி' காரில் வருவார் என கூறப்பட்டது.அதே நேரத்தில், அதே வகையான காரில், உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த, காங்., தொண்டர், குடும்பத்துடன் வந்துள்ளார். இருப்பினும் இந்தப் பிரச்னை குறித்து விசாரிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். 'உள்துறை அமைச்சரின் பதிலில் திருப்தியில்லை' என, காங்., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதையடுத்து, மசோதா நிறைவேறியது.


பார்லி.,யிலும் பிரச்னை:

பிரியங்காவின் வீட்டுக்குள் கார் நுழைந்த பிரச்னையை, பார்லி.,யிலும் காங்., கட்சி நேற்று எழுப்பியது.லோக்சபாவில் கேள்வி நேரத்துக்குப் பிறகு, இந்தப் பிரச்னையை, காங்.,கின் ஆன்டோ ஆன்டனி எழுப்பினார். "சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு என்பது முழுமையான பாதுகாப்பு என அரசு கூறுகிறது. அப்படி இருக்கையில், எப்படி ஒரு கார் அவருடைய வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்," என, அவர் பேசினார்.


'மிகப் பெரிய குளறுபடி'

காங்., தலைவர் சோனியா, அவருடைய மகனும், முன்னாள் தலைவருமான ராகுல், மகளும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா ஆகியோருக்கான, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு சமீபத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. அவர்களுக்கு, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டில்லியில் உள்ள பிரியங்காவின் வீட்டுக்குள், சமீபத்தில் ஒரு கார் நுழைந்துள்ளது. அதில், மூன்றுஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி இருந்தனர். அவர்கள் பிரியங்காவிடம் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வந்ததாகக் கூறியுள்ளனர்.

தீவிர பாதுகாப்பு உள்ள பகுதியில் இருந்தும், பிரியங்காவுக்கு பாதுகாப்பு இருந்தபோதும், வீட்டுக்குள் கார் நுழைந்தது சர்ச்சையானது. இது தொடர்பாக, பிரியங்கா சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா கூறியதாவது: வீட்டுக்குள் ஒரு கார் நுழைந்தது என்பது, பாதுகாப்பில் உள்ள மிகப் பெரிய குளறுபடியே. நாங்கள் எங்களுடைய மற்றும் எங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி கவலைப்படவில்லை. நாட்டில் உள்ள அனைவரின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு குறித்தே கவலைப்படுகிறோம். அதை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை.எஸ்.பி.ஜி., பாதுகாப்பு ஏன் நீக்கப்பட்டது என்பது மத்திய அரசுக்கு மட்டுமே தெரியும். ஆனால், இது ஒரு அரசியல் நடவடிக்கை என்பது மட்டும் நிச்சயம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8+ 60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
04-டிச-201919:28:42 IST Report Abuse
Anantharaman Srinivasan பாதுகாப்பு வேண்டும் என்றால் அவர்களிடம் பணமா இல்லை. சொந்த செலவில் வைத்துக்கொள்ளட்டும். அல்லது கட்சி கொடுக்கட்டும்...
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
04-டிச-201917:54:49 IST Report Abuse
Nagarajan D காந்தி குடும்பத்துக்கு இந்தியாவே தங்கள் சொத்து என்றும், தங்கள் குடும்பம் தின்று தீர்த்த மீதி தான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என நினைக்கிறார்கள். இது மகா வேதனையான விஷயம். சோனியா எதிர் கட்சி முதலாளி, பாராளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவர் கூட இல்லை பிறகு எதற்கு சிறப்பு பாதுகாப்பு? விவாதம் செய்ய விஷயமில்லாததால் தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் குடும்ப அடிமைகள்
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
04-டிச-201911:07:27 IST Report Abuse
Sridhar ராஜ பரம்பரை எனும் மனோபாவம் மிக நன்றாகவே வெளியே தெரிகிறது. இந்த நாகரிகமான தகவல் யுகத்தில் சமுதாய ஊடகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில், வர்ணாசிரம தத்துவங்களை எதிர்க்கும் சீர்திருத்தவாதிகள் உலவும் இந்த சமுதாயத்தில், என்ன ஒரு தயிரியம் இருந்தால் தங்கள் குடும்பத்திற்கு இப்படி ஒரு அடையாள பாதுகாப்பு கோரி தன் கட்சி அடிமைகளையே ஏவிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்? ப்ராமண ஆதிக்கத்தை எதிரிக்கும் சுய அவமரியாதை இயக்கம் நடத்துபவர்கள் கூட க்ஷத்ரிய ஆதிக்கத்தை அதாவது பரம்பரை அரசியலை எதிர்க்க துணிவதில்லையே, ஏன்? கூடிய சீக்கிரமே, இந்த குடும்பத்தாருக்கு கொடுக்கப்பட்டுள்ள பெரிய பெரிய வீடுகளையும் திரும்பி பெற்று அவர்கள் தகுதிக்கேற்ற சிறு குடியமைப்புகளில் அல்லது அவர்கள் சொந்த வீடுகளில் குடியேறுமாறு செய்யவேண்டும். என்ன ஒரு அக்கிரமம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X