பொது செய்தி

இந்தியா

அயோத்தி வழக்கு ராஜிவ் தவான் நீக்கம்

Added : டிச 03, 2019
Advertisement

புதுடில்லி : அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான், 'இந்த வழக்கில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன்' என, சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. 'அந்த இடத்தில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையின்போது, முஸ்லிம்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் ஆஜரானார்.

இந்த வழக்கில், முஸ்லிம் அமைப்பு சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளத்தில், ராஜிவ் தவான் கூறியுள்ளதாவது:இந்த வழக்கில் இருந்து என்னை நீக்கிஉள்ளதாக கூறியுள்ளனர். என்னுடைய உடல்நிலை சரியில்லாததால், இனி இது தொடர்பான வழக்குகளில் ஆஜராக மாட்டேன் என்று கூறியுள்ளனர். அவர்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் வழக்கை நடத்தட்டும். என்னை நீக்குவதற்கு உரிமை உள்ளது.

ஆனால், அதற்கு கூறியுள்ள காரணம் தான் மிகவும் அல்பத்தனமாக உள்ளது. உடல்நிலை சரியில்லை என்றால், மற்ற வழக்குகளில் நான் எப்படி ஆஜராகி வருகிறேன். என்னை நீக்கியது தொடர்பாக, சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டதால் தான், அதற்கு பதிலளிக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X