டிசம்பர் 4, 1910
ஆர்.வெங்கட்ராமன்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, ராஜாமடம் என்னும் கிராமத்தில், 1910 டிச., 4ல் பிறந்தார். பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும், சட்டப் படிப்பும் பயின்ற இவர், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர்.
கடந்த, 1942ல், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் ஈடுபட்ட இவர், வேலுாரில் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். 1980 --- 82ல் காங்கிரஸ் அமைச்சரவையில், நிதி அமைச்சராகவும், 1982 --- 84 வரை, பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்தார். கடந்த, 1984ல், துணை ஜனாதிபதியாகவும், 1987 -- - 92 வரை, நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்.
அக்காலக் கட்டத்தில், இலங்கை பிரச்னை, போபர்ஸ் ஊழல், ராஜிவ் படுகொலை, பங்குச் சந்தை ஊழல் என, பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கியிருந்தது. ஐந்தாண்டுகளில், நான்கு பிரதமர்களுடன் பணியாற்றிய பெருமைக்குரியவர். 2009 ஜன., 27ல் காலமானார்.
அவர் பிறந்த தினம் இன்று.