பொது செய்தி

தமிழ்நாடு

'பயோமெட்ரிக்' பதிவு மின் வாரியம் உத்தரவு

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : மின் வினியோகம், மின் தொடரமைப்பு அலுவலகங்களில், 'பயோமெட்ரிக்' எனப்படும், கைரேகை வருகை பதிவு முறையை அமல்படுத்த, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக செயல்படுகிறது. இவற்றில் பணிபுரியும் சிலர், குறித்த நேரத்திற்கு அலுவலகம் வருவதில்லை. அவர்கள், ஒழுங்காக வந்தது போல வருகை பதிவு செய்கின்றனர். இதற்கு, பதிவேடுகளில் வருகை பதிவு செய்வதே காரணம். இதனால், அனைவரும் குறித்த நேரத்தில், அலுவலகம் வர, பயோமெட்ரிக் வருகை பதிவு முறை, மின் உற்பத்தி பிரிவில் உள்ள, அனல், நீர், எரிவாயு மின் நிலையங்களில், சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து, மின் வினியோகம், மின் தொடரமைப்பு அலுவலகங்களிலும், அந்த முறையை செயல்படுத்துமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக, தங்கள் அலுவலகத்திற்கு ஒப்புதல் அளித்த பதவிகள்; எத்தனை பேர் பணிபுரிகின்றனர்; காலியிடம்; அலுவலகத்தில் இணைய சேவை உள்ளதா ஆகிய விபரங்களை, வரும், 10ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு, மேற்பார்வை பொறியாளர்களை, மின் வாரியம் கேட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
04-டிச-201908:32:11 IST Report Abuse
Bhaskaran சிலநாட்களுக்குமுன் ஒருதிருமணத்தில் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியரை சந்தித்தேன் அவரிடம் இப்போது பணிபுரியும் ஆசிரியர்கள் விறல் ரேகை வைப்பதால் இஷ்டத்துக்கு பள்ளிக்கு செல்லமுடியவில்லை என்று குறைப்படுகின்றனர் என்று சொன்னார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X