பயங்கரவாதிக்கு, 'ஜாமின்' ரத்து

Added : டிச 03, 2019
Advertisement

புதுடில்லி : லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபருக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், மஹாராஷ்டிரா மாநிலம் நாந்தேத் ஆகிய இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையதாக, முகமது இர்பான் என்பவர், 2012ல் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு, முகமது இர்பானுக்கு, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கில், ஜூன் மாதம், இர்பானுக்கு ஜாமின் அளித்து, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இர்பான் ஜாமினில் இருந்தால், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்' என, தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் வாதிடப்பட்டது.இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு தடை விதித்த நீதிபதிகள், இர்பானை கைது செய்ய, தேசிய புலனாய்வு அமைப்புக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X