அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு பொருட்கள் ஒரு வாரத்தில் கொள்முதல்

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பிற்கான முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களை, ஒரு வாரத்திற்குள் கொள்முதல் செய்யும்படி, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், 2.05 கோடி அரிசி கார்டு தாரர்களுக்கு, பொங்கலை முன்னிட்டு, பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கார்டுதாரருக்கு, தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலம், கரும்பு துண்டு, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட உள்ளது.இதில், பச்சரிசி, சர்க்கரையை, நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும்.

முந்திரி, திராட்சை மற்றும் ஏலத்தை, போக்குவரத்து செலவு உட்பட, 40 ரூபாய்; கரும்புக்கு, 15 ரூபாயாக விலை நிர்ணயித்து, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களே வாங்க, கூட்டுறவு துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொங்கல் பரிசு தொகுப்பிற்கு தேவையான அனைத்து பொருட்களையும், ஒரு வாரத்திற்குள் கொள்முதல் செய்து, தகுதியுள்ள கார்டுதாரர்களுக்கு வழங்க, தயார் நிலையில் வைக்க வேண்டும். பதிவாளரின் அறிவுரை பெற்ற பின், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
04-டிச-201918:55:17 IST Report Abuse
K. V. Ramani Rockfort போன மாசமே இந்த திட்டத்தை துவக்கி வைத்தாரே நம்ப முதலமைச்சர், இன்று வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்து சேறவில்லையே தேர்தலுக்கு முன்னே கொடுக்கலாம் என்று நினைக்கிறார்களோ ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X