அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரு பதவிக்கு மேல் போட்டியா? வேட்பு மனு நிராகரிக்கப்படும்

Added : டிச 03, 2019
Share
Advertisement
சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர், ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு, மனு தாக்கல் செய்தால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும். நான்கு பதவி'தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும், இரண்டு கட்டமாக, தேர்தல் நடக்கும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள், வேட்புமனு தாக்கல்

சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர், ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு, மனு தாக்கல் செய்தால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும்.

நான்கு பதவி'தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு மட்டும், இரண்டு கட்டமாக, தேர்தல் நடக்கும்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள், வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய் கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி களுக்கான, வேட்புமனு தாக்கல் படிவம், நான்கு பக்கங்கள் உடையது.தேர்தல் நடக்க உள்ள, நான்கு பதவிகளில், ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே, ஒருவர் நிற்க முடியும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு, யாரேனும் வேட்பு மனு தாக்கல் செய்தால், அவர்களது மனுக்கள், தேர்தல் நடத்தும் அலுவலரால் நிராகரிக்கப்படும்.ஏனெனில், 1995ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சி தேர்தல் விதி, 30ன்படி, ஒரு பதவிக்கு மேல், ஒருவர் போட்டியிட தடை விதிக்கப்பட்டுஉள்ளது. அதேபோல், தேர்தலில் போட்டியிடுபவர், வி.ஏ.ஓ., கிராமப் பணியாளர், மத்திய - மாநில அரசுக்கு சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள, பொதுத்துறை நிறுவனத்தில், அலுவலர் அல்லது பணியாளராக இருக்கக் கூடாது. இவ்விபரம், வேட்பு மனு படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வோர், விரும்பும் சின்னங்களை குறிப்பிட வேண்டியதில்லை. சின்னம்ஆனால், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர், தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் சின்னங்களாக, மூன்றை மனுவில் குறிப்பிட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு, அவர்கள் கட்சி சின்னம் ஒதுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X