அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் இலவச அரிசி: ரூ.605 கோடி செலவு

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : சர்க்கரை ரேஷன் கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்றியவர்களுக்கு, இலவச அரிசி வழங்குவதற்காக, மாதந்தோறும், 50.41 கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்கு, 605 கோடி ரூபாய், கூடுதல் செலவாகிறது.

தமிழகத்தில், ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. சர்க்கரை கார்டு களுக்கு, அரிசி தவிர, பிற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். அரிசி கார்டில், ஒரு நபருக்கு, 500 கிராம் சர்க்கரை வீதம், அதிகபட்சமாக, ஒரு குடும்பத்திற்கு, 2 கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது. சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, அரிசி இல்லாமல், ஒரு குடும்பத்திற்கு, 5 கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது. மொத்தம், 10.19 லட்சம் சர்க்கரை கார்டுகள் இருந்தன.

இவற்றை, அரிசி கார்டுகளாக மாற்ற விரும்பினால், நவ., 19 முதல், 29 வரை விண்ணப்பிக்கலாம் என, அரசு அறிவித்தது. அதை ஏற்று, 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு, அரிசி கார்டாக மாற்றம் செய்தவர்களுக்கு வழங்க, மாதத்திற்கு, 20 ஆயிரத்து, 390 டன் அரிசி, கூடுதலாக தேவை. அதற்காக மாதந்தோறும் ஏற்படும், கூடுதல் செலவு தொகை, 50.41 கோடி ரூபாய்; ஆண்டுக்கு, 605 கோடி ரூபாய்.இந்நிதியை ஒதுக்கி, அரசாணை வெளியிடும் படி, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர், அரசுக்கு கடிதம் அனுப்பினார்; அவரது கோரிக்கையை, அரசு ஏற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
04-டிச-201910:27:03 IST Report Abuse
Loganathan Kuttuva மிகவும் வசதியானவர்களும் அரிசி கார்டுகளுக்கு மாறியுள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X