சென்னை : பி.எட்., கல்லுாரிகள், தங்களின் செயல் திறன் அறிக்கையை, இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யும்படி, கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில், தமிழகத்தில், 700 பி.எட்., கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளுக்கு, மத்திய அரசின், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது. அதனால், ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் விதிகளை பின்பற்றியே, மாணவர் சேர்க்கை நடத்தி, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்த வேண்டும். கல்லுாரிகள் தரப்பில், விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, ஆண்டுதோறும் செயல் திறன் அறிக்கை பெறப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான செயல் திறன் அறிக்கையை, இந்த மாதத்துக்குள் தாக்கல் செய்யுமாறு, பி.எட்., கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சேர்த்த மாணவர்கள் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட இடங்கள், தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட விபரங்கள், செயல் திறன் அறிக்கையில் இடம்பெறும்.