அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெரும் சேதம் தவிர்க்க கவனம் தேவை: கமல்

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 பெரும் சேதம் தவிர்க்க கவனம் தேவை: கமல்

சென்னை : 'மழை காலத்தில் மக்கள் கவனத்துடனும், அரசு முன்னெச்சரிக்கையுடனும் இருந்து, பெரும் சேதம் ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் அறிக்கை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையில், இடிந்த கற்சுவர் அருகில் இருந்த வீடுகளில் விழுந்தது. இதில், நான்கு வீடுகளில் இருந்த, 17 பேர் உயிரிழந்த சம்பவம் கேட்டு, மிகவும் துயரம் அடைந்தேன்.இது, ஒரு விபத்து என்றாலும், இதில், ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால், அரசும், காவல் துறையும் நேர்மையுடன் அணுகி, பாதித்த மக்களுக்கு நீதி கிடைக்க, ஆவண செய்ய வேண்டும்.எத்தனை நிவாரணம் கிடைத்தாலும், இந்த இழப்பை ஈடுசெய்ய இயலாது. அவர்களின் துயரில் நானும் பங்கேற்கிறேன்.

வரும் மழைக்காலத்தில் மக்கள் கவனத்துடனும், அரசு முன்னெச்சரிக்கையுடனும் இருந்து, பெரும் சேதம் ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai,இந்தியா
04-டிச-201909:44:42 IST Report Abuse
Nisha Rathi 17 பேர் உயிரிழந்த சம்பவம் கேட்டு, மிகவும் துயரம் அடைந்தேன்.இது, ஒரு விபத்து என்றாலும், இதில், ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால், அரசும், காவல் துறையும் நேர்மையுடன் அணுகி, பாதித்த மக்களுக்கு நீதி கிடைக்க, ஆவண செய்ய வேண்டும்.எத்தனை நிவாரணம் கிடைத்தாலும், இந்த இழப்பை ஈடுசெய்ய இயலாது. அவர்களின் துயரில் நானும் பங்கேற்கிறேன். அப்படி என்றல் நீயும் போய் பெறவேண்டியது தானே கமல் வாய் சவுடால் கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X