அரசியல் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் - திருச்சி இடையே 8 வழி சாலை வேண்டும்: ராமதாஸ்

Added : டிச 03, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : 'திண்டிவனம் - திருச்சி சாலையை, எட்டு வழியாக மாற்ற, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 24.5 கி.மீ., சாலை, 3,309 கோடி ரூபாயில், மேம்பால சாலையாக அமைக்கப் படுகிறது. செங்கல்பட்டு - திண்டிவனம் இடையே, 68.50 கி.மீ., சாலை, 3,062 கோடி ரூபாயில், எட்டு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் திட்டமிட்டப்படி முடிந்தால், அடுத்த ஓராண்டுக்குள், தாம்பரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை தான், வட மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் உயிர்நாடிப் பாதை. இந்த சாலை விரிவாக்கப்பட்டால், அது பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும்; தமிழக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.சாலை பணிகளுக்கான ஒப்பந்தப் பணிகளை விரைந்து முடித்து, கட்டுமான பணிகளை அடுத்த ஆண்டில் துவங்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, திண்டிவனம் - திருச்சி இடையிலான பகுதியையும், எட்டு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
04-டிச-201906:08:35 IST Report Abuse
 Muruga Vel இது தமிழினத்தை அவமதிக்கும் செயல் என்று ஒரு கும்பல் வரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X