கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் மீதான வழக்குகள் திரும்ப பெற்றது தமிழக அரசு

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீதான அவதுாறு வழக்குகளை, தமிழக அரசு திரும்ப பெற்றதை தொடர்ந்து, இரண்டு வழக்குகளை முடித்து வைத்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமர்சனம்மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்ததாக, விஜயகாந்த் மீது, 2012, 2013 மற்றும், 2016ம் ஆண்டுகளில், நான்கு வழக்குகளும், முன்னாள் அமைச்சர் ரமணாவை விமர்சித்ததாக, 2014ல், அவதுாறு வழக்கும் தொடரப்பட்டன.இந்த வழக்குகளின் விசாரணை அனைத்தும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகள், சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தன.

விசாரணையின் போது, ஐந்து வழக்குகளையும் திரும்ப பெற்றதற்கான அரசாணையை, அரசு சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அரசு பிறப்பித்த ஆணையின் படி, 2013, 14ம் ஆண்டுகளில் தொடரப்பட்ட, இரண்டு வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. விசாரணைகடந்த, 2012 மற்றும், 2013ம் ஆண்டில் தொடரப்பட்ட மற்றொரு அவதுாறு வழக்கில், அந்த செய்தியை வெளியிட்ட, பத்திரிகைகள் மீதான வழக்கின் முடிவை, அரசு தெரிவிக்க வேண்டும்.


கடந்த, 2016ல், தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதன் விசாரணை, வரும், 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X