பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி, மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல்.. பிப்ரவரியில்!

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் நெருக்கடி அதிகமாவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழகத்தில் ஊரகம், நகர்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. ஊரக உள்ளாட்சிகளில் மாவட்ட
நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சி தேர்தல்,ஆவணங்கள்,மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் நெருக்கடி அதிகமாவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் ஊரகம், நகர்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. ஊரக உள்ளாட்சிகளில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் உள்ளன. நகர்புற உள்ளாட்சிகளில் மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர்,பேரூராட்சி கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் முறை சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் நகர்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு மட்டுமே கவுன்சிலர் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சிகளில் உள்ள 1.18 லட்சம் பதவிகளுக்கு டிச. 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான மனு தாக்கல் நாளை மறுநாள் துவங்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் மாநகராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 'விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும்' என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

இடஒதுக்கீடு அடிப்படையில் மேயர் பதவிகளை பிரிப்பதில் நீடிக்கும் குழப்பமே தேர்தல் அறிவிக்காததற்கு காரணம் என கூறப்படுகிறது. மொத்தம் 15 மேயர் பதவிகள் உள்ளதால் 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் அவற்றை பெண்கள் எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதாக உறுதியளித்தனர்.

'அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஜெ. பிறந்த நாளுக்கு முன் அ.தி.மு.க.வினரை மேயர்களாகவும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்களாகவும் பார்க்க வேண்டும்' என்றும் கூறினர். அதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் நகர்புற உள்ளாட்சி களுக்கு தேர்தல் அறிவிக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கும்போதே தேர்தலை சந்திக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் விரும்புகின்றனர். இதை அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாயிலாக அ.தி.மு.க. தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் நகர்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தலைமை முன்வந்துள்ளது. இதற்காக மேயர் இடஒதுக்கீடு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட உள்ளது. பெண்களுக்கு 7 மேயர் பதவிகளும் மற்றவர்களுக்கு 8 பதவிகளும் ஒதுக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த பின் தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துவங்கவுள்ளது. எனவே ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பின் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகள் முறைப்படி அறிவிக்கப்படலாம். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி பிப்ரவரியில் ஒரே கட்டமாக அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட உள்ளது.


மிரட்டும் வழக்கு; ஆணையம் ஆலோசனை:

உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கை எதிர்கொள்வது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, செயலர் சுப்பிரமணியன் சட்ட ஆலோசகர் பாலமணிகண்டன் ஆகியோர் நேற்று வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நீடித்தது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ஏதாவது சட்ட சிக்கல் வருமா என்பது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளது. ஆலோசனைக்கு பின் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை தயார் செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-டிச-201912:44:49 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) மக்கள் காசு வாங்காமல் வோட்டு போட்டால் தான் நல்லவர்கள் பொறுப்புக்கு வர முடியும். தீதும் நன்றும் பிறர் தர வாரா
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
04-டிச-201911:41:47 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை தேர்தலா நடக்குமா நம்பிட்டோம்.
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
04-டிச-201910:48:43 IST Report Abuse
நக்கீரன் ஆஹா ஏன்னா நடிப்பு? உங்க ரீல் அறுந்து ரெம்ப நாள் ஆச்சு. ஏறத்தாழ ஐந்து வருடங்களாக உள்ளாட்சி தேர்தலையே உங்களின் சுய நலனுக்காக நடத்தாமல் விட்டு விட்டீர்கள். இதனால் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். சாதாரண மனித சட்டத்தை மீறினால் தப்பு. ஆனால் அரசாங்கம் தன் கடமையை செய்ய தவறினால் தண்டனை ஒன்றுமில்லை. சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் இந்த போலி ஜனநாயக நாட்டில் இதை கேள்வி கேட்க ஆளில்லை. கேள்வி கேட்பவர்களையும் பொய் குற்றம் சாட்டி ஒடுக்குவது. இதன் முடிவு.... இறைவன் கையில்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X