பொது செய்தி

தமிழ்நாடு

விக்ரம் லேண்டர்

Added : டிச 04, 2019
Advertisement
 விக்ரம் லேண்டர்

சென்னை : 'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' கருவி, நிலவில் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டறிய உதவிய, தமிழகத்தைச் சேர்ந்த இன்ஜினியர் சண்முக சுப்ரமணியனை, 'நாசா' பாராட்டியுள்ளது.


நிலவில் உள்ள கனிம வளங்கள், நீர் இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 'சந்திரயான்- - 2' என்ற விண்கலத்தை, 'ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3' ராக்கெட் உதவியுடன், ஜூலை, 22ல் விண்ணில் செலுத்தியது. பிரிந்ததுசெப்., 2ல், சந்திரயான் -- 2 விண்கலத்தில் இருந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும், 'விக்ரம்' என பெயரிடப்பட்ட, லேண்டர் கருவி, வெற்றிகரமாக பிரிந்தது. அம்மாதம், 7ம் தேதி, நிலவில், 'சாப்ட் லேண்டிங்' என்ற முறையில், லேண்டரை தரையிறக்க முயற்சிக்கப்பட்டது.

நிலவை நெருங்க, 2.1 கி.மீ., தொலைவு இருந்த நேரத்தில், லேண்டர் மற்றும் கட்டுப்பாட்டு மையம் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின், லேண்டரின் நிலை கேள்விக் குறியானது. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில், இஸ்ரோவுடன், அமெரிக்காவின், 'நாசா' ஆய்வு மையமும் இணைந்தது. அதன்படி, நாசாவின், எல்.ஆர்.ஓ., என்ற விண்கலம், நிலவில், விக்ரம் லேண்டர் பயணித்த பகுதியில், புகைப்படங்களை எடுத்து, கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பியது.அப்பகுதியில், வெளிச்சம் குறைவாக இருந்ததால், புகைப்படங்களில் லேண்டரை அடையாளம் காண முடியவில்லை.

இருப்பினும், சந்திரயான் - 2 விண்கலத்தின், 'ஆர்பிட்டர்' செயல்பாடு நன்கு இருந்தது. இந்நிலையில், தற்போது, விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து உள்ளதாக, நாசா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அதில், லேண்டர் நிலவில் மோதிய புள்ளியும், சிதறிய உதிரி பாகங்கள் பகுதியும் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


நீலநிறம்



நாசா வெளியிட்டுள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பச்சை நிறப் புள்ளிகள், விண்கல குப்பை, துகள்களை குறிப்பதாக தெரிவித்துள்ளது. நீல நிறப் பகுதிகள், லேண்டர் மோதியதால் ஏற்பட்ட சேதத்தை குறிப்பவை. செப்., 11ம் தேதி, நிலவின் தென் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப் படங்களில் இருந்து, இது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. லேண்டரை கண்டுபிடிக்க முக்கிய காரணமாக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த இன்ஜினியர், சண்முக சுப்ரமணியனை, நாசா நன்றி தெரிவித்து பாராட்டி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X