சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரசாத் ஸ்டுடியோ பிரச்னை

Added : டிச 04, 2019
Share
Advertisement
சென்னை : பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் இடையேயான பிரச்னைக்கு, சமரச பேச்சில் தீர்வு காணும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.சென்னை, சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டுடியோ உள்ளது. இங்கு, இசை அமைப்பாளர் இளையராஜா, 'ரிகார்டிங் தியேட்டர்' அமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு, இங்கிருந்து தான் இசை

சென்னை : பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும் இடையேயான பிரச்னைக்கு, சமரச பேச்சில் தீர்வு காணும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.சென்னை, சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டுடியோ உள்ளது.

இங்கு, இசை அமைப்பாளர் இளையராஜா, 'ரிகார்டிங் தியேட்டர்' அமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு, இங்கிருந்து தான் இசை அமைத்துள்ளார். ஸ்டுடியோவில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக கூறி, தியேட்டரை காலி செய்ய, இளையராஜாவிடம் நிர்வாகம் கேட்டது.ரிகார்டிங் தியேட்டரை காலி செய்யக்கூடாது என, ஸ்டுடியோ நிர்வாகத்தை எதிர்த்து, சென்னை சிவில் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடுத்தார்.இவ்வழக்கில், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க, சிவில் நீதிமன்றம் மறுத்து விட்டது. அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'பிரசாத் ஸ்டுடியோரவில், ௪௨ ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளேன்; ௬,௦௦௦ பாடல்கள், ஆயிரத்துக்கும் மேலான படங்களுக்கு இசை அமைத்துள்ளேன்.'சிவில் நீதிமன்றத்தில் விசாரணை முடியும் வரை, ரிகார்டிங் தியேட்டருக்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது என கோரினேன். இடைக்கால உத்தரவு பிறப்பிக்க, சிவில் நீதிமன்றம் மறுத்து விட்டது' என, கூறப்பட்டது. இம்மனு, நீதிபதி பாரதிதாசன் முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையை, அடுத்த வாரத்துக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில், இளையராஜாவும், பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகிகளும் சமரச பேச்சு நடத்தவும், அதுவரை இருதரப்பும் பிரச்னையை பெரிதுபடுத்தக் கூடாது என்றும், நீதிபதி அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X