சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சம்பவ இடத்திற்கு செல்லாத போலீஸ் மீது கடும் நடவடிக்கை

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை : 'காவலன் டயல் - 100; காவலன் - எஸ்.ஓ.எஸ்' எனும், 'மொபைல் ஆப்'கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதவி கோரிய அழைப்புகள் மீது அலட்சியம் செய்தால், போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

மண்டல ஐ.ஜி.,க்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., திரிபாதி நேற்று வெளியிட்டுள்ள சுற்றிக்கை: தெலுங்கானா மாநிலத்தில், 27 வயதுடைய, கால்நடை பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டார். இச்சம்பவம் போலீசார் விழிப்புடன், விரைந்து பணியாற்ற வேண்டிதை நினைவூட்டுகிறது. உதவி கோரி, பொது மக்கள் தொடர்பு கொண்டால், குறுஞ்செய்தி அனுப்பினால், உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தங்களுக்கு கீழ் பணிபுரியும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எல்லை பிரச்னை, நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி, போலீசார் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் கூடாது.

அவ்வாறு செயல்பட்டால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் உதவி கோரி, பெண்கள், சிறார்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தொடர்பு கொண்டால், தகவலின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து, காலத்தை வீணடிக்காமல், போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். அதுபற்றி தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்பெண்கள், குழந்தைகள் மற்றும் மூதாட்டிகள் என, அனைவருக்கும், உடனடியாக, போலீசாரின் உதவி கிடைக்கும் வகையில், தமிழக காவல் துறை, காவலன் டயல் - 100 மற்றும் காவலன் - எஸ்.ஓ.எஸ்., எனும் இரு 'மொபைல் ஆப்'களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த 'மொபைல் ஆப்'கள் குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும்.பொது நல சங்கங்கள் மற்றும் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளிடம் இணைந்து கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X