பொது செய்தி

தமிழ்நாடு

66 அடியை கடந்தது வைகை அணை

Added : டிச 04, 2019
Advertisement
 66 அடியை கடந்தது வைகை அணை

ஆண்டிபட்டி : வைகை அணை நீர் மட்டம் 66 அடியை கடந்ததால் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கரையோரத்தில் வசிப்போருக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

பெரியாறு அணை, வருஷநாடு வைகை ஆறு, போடி கொட்டக்குடி, தேனி முல்லை ஆறுகளின் இருந்து நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் நவ. 9-ல் 65.30 அடியாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் நீர்மட்டம் 59 அடி வரை குறைந்தது.கடந்த சில நாட்களாக வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்வதால் வரத்தும் கணிசமாக இருந்தது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட நீரும் நிறுத்தப்பட்டது.

இதனால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து நேற்று பகல் 1:00 மணிக்கு 66.01 அடியானது (மொத்த உயரம் 71 அடி). இதனை தொடர்ந்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.அணையில் இருந்து எந்த நேரத்திலும் கூடுதல் நீர் திறக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதால், தேனி, திண்டுக்கல் மாவட்ட வைகை கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,008 கன அடி, வெளியேற்றம் 360 கன அடியாக இருந்தது.

நீர் மட்டம் 68.50 அடியானதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை கடந்ததும் 3- வெள்ள கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X