பொது செய்தி

தமிழ்நாடு

வலையில் சிக்கிய ராக்கெட் பூஸ்டர் ஸ்ரீஹரிகோட்டா பயணம்

Added : டிச 04, 2019
Advertisement
 வலையில் சிக்கிய ராக்கெட் பூஸ்டர் ஸ்ரீஹரிகோட்டா பயணம்

புதுச்சேரி : புதுச்சேரியில் மீட்கப்பட்ட ராக்கெட் பூஸ்டரை, ஆய்வுக்காக, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் ஸ்ரீஹரிகோட்டா எடுத்துச் சென்றனர்.

புதுச்சேரி, வம்பாக்கீரப்பாளையம் மீனவர்கள், நேற்று முன்தினம், 10 நாட்டிகல் தொலைவில் மீன் பிடிக்க வீசிய வலையில், கனமான பொருள் சிக்கியது. அதை, கரைக்கு இழுத்து வந்தபோது, சமீபத்தில், 'இஸ்ரோ' விண்ணில் ஏவிய, பி.எஸ்.எல்.வி., சி - 46 ராக்கெட்டை உந்தி தள்ளுவதற்கு, எரிபொருள் ஏற்றிச் செல்லும், 13.5 மீட்டர் நீளமுள்ள ராக்கெட் பூஸ்டர் என தெரிந்தது. தகவல் கிடைத்து, நேற்று வம்பாகீரப்பாளையம் வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், ராக்கெட் பூஸ்டரை கிரேன் மூலம் எடுத்துச் செல்ல தயாராகினர்.

அப்பகுதி மீனவர்கள், ராக்கெட் பூஸ்டரை கரைக்கு இழுத்து வர பயன்படுத்திய நான்கு வலைகள் அறுந்து சேதமடைந்ததால், அதற்குரிய இழப்பீட்டு தொகை, 10 லட்சம் வழங்கிய பின், எடுத்து செல்ல வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய், போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுக்கு பின், போராட்டத்தை விலக்கி கொண்டனர். மதியம், 2:30 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள், ராக்கெட் பூஸ்டரை, ராட்சத கிரேன் மூலம் டிரெய்லர் லாரியில் ஏற்றி, ஸ்ரீஹரிகோட்டாவுக்கு எடுத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X