சிதம்பரம் ஜாமின் மனு சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

Added : டிச 04, 2019
Advertisement

புதுடில்லி : முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2007ல், வெளிநாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற்றது. இதற்கு அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை, ஆகஸ்ட் 21ல், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவர் டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால், அதே வழக்கில், பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையினர், சிதம்பரத்தை கைது செய்ததால், அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

இந்த வழக்கில் ஜாமின் கோரி, சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை, நவ., 28ல், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X