கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குமரி கோயில் நில ஆவணங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வழக்கு

Added : டிச 04, 2019
Advertisement

மதுரை : கன்னியாகுமரி மாவட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலம் பற்றிய பழைய ஆவணங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்ய, அறநிலையத்துறை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஆதிகேசவ பக்தர்கள் சேவா அறக்கட்டளை செயலாளர் தங்கப்பன் தாக்கல் செய்த பொதுநல மனு:கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவோடு இருந்தது. அந்த மாவட்ட கோயில்கள் வருவாய்த்துறையால் நிர்வகிக்கப்பட்டன. பின் தமிழகத்துடன் அம்மாவட்டம் இணைந்தது. அறநிலையத்துறையின் கீழ் கோயில்கள் உள்ளன. கோயில்களுக்குச் சொந்தமான நிலம் தொடர்புடைய ஆவணங்கள் மலையாளத்தில் உள்ளன.

கலெக்டர் அலுவலக ஆவண அறை, பத்மநாபபுரம் குழித்துறை நீதிமன்றத்தில் பாதுகாக்கப் படுகிறது.வருவாய்த்துறை ரீசர்வேக்கு பின், பழைய செட்டில்மென்ட் பதிவேடுகளை பயன்படுத்துவதில்லை. இதனால் நிலத்தை அறிந்துகொள்ள மக்கள் சிரமப்படுகின்றனர். சட்டத்திற்கு புறம்பாக ஆவணங்கள் பதிவுகள் செய்யப்படுகின்றன.உரிய ஆவணங்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் இல்லாததால், கோயில் நிலத்திற்கு உரிமை மாற்றம் பத்திரப்பதிவுகளை தவறுதலாக செய்கின்றனர்.

அப்பாவிகள் பாதிப்பதோடு, சில சமூக விரோதிகள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா மாறுதல் செய்கின்றனர்.பல கோயில்கள் வருவாய் இல்லாமல், பூஜை செய்ய வழியின்றி உள்ளன. பழைய செட்டில்மென்ட், பழைய சர்வே எண் ஆவணங்களை தமிழில் மாற்றம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வைக்காததால், கோயில் நிலத்தை உரிமை மாற்றம் செய்ய காரணமாக அமைகிறது.

மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழுள்ள 490 கோயில்களுக்குச் சொந்தமான நிலம் பற்றிய பழைய ஆவணங்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்து, டிஜிட்டலில் ஆவணப்படுத்த தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு தங்கப்பன் மனு செய்தார். நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு, 'அறநிலையத்துறை கமிஷனர் விரைந்து பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X