கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அழகிரியின் தேர்தல் வழக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : டிச 04, 2019
Advertisement

மதுரை : முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மீதான தேர்தல் வழக்கை, உரிய நீதிமன்ற விசாரணைக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்க, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க, உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், மதுரை, எம்.பி.,யாக, அழகிரி வெற்றி பெற்றார். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.குறிப்பிட்ட அசையா சொத்து விபரத்தை, வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்ததாக, அழகிரிக்கு எதிராக, மதுரை லோக்சபா தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்தவர் சார்பில், 2014ல் மதுரை, ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அழகிரி, 'தாமதமாக, அரசியல் உள்நோக்கில், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார்.நீதிபதி, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவு:இதை, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் உரிய நீதிமன்ற விசாரணைக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்க, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X