கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மதுரை- கன்னியாகுமரி ரோட்டில் ரூ.8 கோடியில் மரக்கன்றுகள்

Added : டிச 04, 2019
Advertisement

மதுரை : தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட தாக்கலான வழக்கில், 'மதுரை-கன்னியாகுமரி இடையே 8 கோடி ரூபாயில் மரக்கன்றுகள் நட வனத்துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது,' என என்.எச்.ஏ.ஐ., தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறை அறிக்கை தர நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை வழக்கறிஞர் திருநாவுக்கரசு தாக்கல் செய்த பொதுநல மனு:மன்னர் ஆட்சி காலத்திலிருந்து சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டது. நீண்ட துாரம் பயணிப்போர் ஓய்வு எடுக்க பயன்பட்டது. வேம்பு, புளிய மரங்கள் பராமரிப்பை குத்தகைக்கு விட்டதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைத்தது.

நான்கு வழிச்சாலைக்காக மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. சாலை விரிவாக்கத்தின் போது மரங்களை பாதுகாக்க மத்திய போக்குவரத்துறை பசுமை வழிச்சாலை (மரங்கள் நடுதல், அழகுபடுத்துதல், பராமரித்தல்) கொள்கையை 2015ல் கொண்டுவந்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை 50 ஆயிரம் மரங்கள் நடப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) அறிவித்தது.

நடவடிக்கை இல்லை.சாலை அமைக்க மரங்களை அகற்றினால், ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரங்களை நட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட உத்தரவிட வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசு மனு செய்தார். நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது. என்.எச்.ஏ.ஐ., தரப்பில், 'மதுரை-கன்னியாகுமரிவரை (என்.எச்.,7) 8 கோடியே 3 லட்சத்து 56 ஆயிரத்து 860 ரூபாயில், மரக்கன்றுகள் நட வனத்துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இப்பணி 5 ஆண்டுகளில் நிறைவடையும்,' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள்: தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தற்போதைய நிலை குறித்து ஜன.,6 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X