சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்கள் மீட்பு

Added : டிச 04, 2019
Advertisement

பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே, நேற்று இரவு வெள்ளாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

ஒருவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், பச்சமலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், கல்லாற்றில் அதிக அளவிலான வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று இரவு 7.30 மணியளவில், பெரம்பலுார் மாவட்டம், லப்பைக்குடிகாடு பகுதியை சேர்ந்த முஹமது ஹாசித் மகன் முகமது அஸ்வாக்,12, ஹவுகத் அலி மகன் ஷேக் ரசீது,10, அக்பர் பாஷா மகன் அபு பாரித்,9, அபுநா பாஷா மகன் ஆதின்,10, ஆகிய நால்வரும் லப்பைக்குடிகாடு மேற்கு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே, வெள்ளாற்றில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர் பாராதவிதமாக நால்வரும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த சையது பாஷா மகன் அசாருதீன்,20, வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்ட ஷேக் ரசீது, அபு பாரித், ஆதின் ஆகியோரை மீட்டார்.தகவலறிந்த, மங்கலமேடு போலீஸார் மற்றும் வேப்பூர், பெரம்பலுார் தீயணைப்பு மற்றும் மீட்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று முகமது அஸ்வாக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை.கடுமையான வெள்ளப்பெருக்கும், புதை மணலும் இருப்பதால் சிறுவனை தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சிறுவன் முகமது அஸ்வாக்கை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X