பொது செய்தி

தமிழ்நாடு

'இ- - பைக்'கிற்கு மானியம் தந்தால் சென்னையில் வரவேற்பு அதிகரிக்கும்!: சொல்கிறார் மோட்டார் பந்தய வீரர் சுதாகர்

Added : டிச 04, 2019
Advertisement
 'இ- - பைக்'கிற்கு மானியம் தந்தால் சென்னையில் வரவேற்பு அதிகரிக்கும்!: சொல்கிறார் மோட்டார் பந்தய வீரர் சுதாகர்

''சென்னை நகரில், 'இ -- ஆட்டோ, இ -- பஸ்' போன்றவை களம் இறங்கியுள்ள நிலையில், விபத்துகளை குறைப்பதற்கும், மாசு கட்டுப்படுத்தவும், 'இ -- பைக்' பெரிதும் உதவும். இ -- பைக் குறித்த ஆர்வமும், மக்களிடம் அதிகரித்துள்ளது,'' என்கிறார், ஏழு முறை, தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றவர், மோட்டார் பந்தய வீரர் சுதாகர். அவருடன் பேசியதிலிருந்து...


மோட்டார் பந்தயத்தில் உங்கள் சாதனை என்ன?

என் மோட்டார் பந்தய பயணம், 20 ஆண்டுகள் கடந்து விட்டது. தேசிய அளவிலான போட்டியில், ஏழு முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளேன்; 120, 'டிராபி' வாங்கியுள்ளேன். அடுத்த தலைமுறையில்,'சைக்கிளிங்' தான் பெரும் வரவேற்பை பெறும்.'பிட்னஸ்'க்காக, பலர் சைக்கிளிங் செய்வதில் ஆர்வமாக உள்ளனர். அதற்காக, மூன்று மாதங்களாக, சைக்கிளிங் விற்பனையகத்தை துவக்கி நடத்தி வருகிறேன். இத்துடன், இ- - பைக் விற்பனையும் துவக்கப் பட்டு உள்ளது. ஒரு மோட்டார் பந்தய வீரருக்கான, 'ஸ்பான்சர்' இங்கு பெரிதாக இல்லை.


சென்னை மக்களிடம், இ- - பைக்கிற்கு வரவேற்பு எப்படி உள்ளது?



பல நிறுவனங்கள், இ- - பைக் தயாரிப்பில் இறங்கி விட்டன. ஹீரோ நிறுவனம் தான், சென்னையில், இ- - பைக் விற்பனையை முதலில் துவக்கியது. விரைவில், பலர் களமிறங்குவர். இ- - பைக் குறித்து, ஒரு நாளுக்கு, 20 பேராவது தகவல்களை கேட்டு வருகின்றனர். மாதத்திற்கு ஐந்து, இ- - பைக் விற்பனையாகிறது. பெட்ரோல் விலை ஏற்றம், மாசு அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்ற பல காரணங்களால், இ- - பைக் மீதான நாட்டம் அதிகரித்துள்ளது.


இ- - பைக்கால் என்ன பயன்?

தமிழகத்தில், 350 வாட்ஸ் வரையிலான, இ - பைக்குகளுக்கு வாகன பதிவு, லைசென்ஸ் கட்டாயமில்லை. மணிக்கு, 30 கி.மீ., வேகத்தில் தான் செல்லும்; 60 கி.மீ., வேகத்தில் செல்லும் வண்டிகளுக்கு பதிவு கட்டாயம்.குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். ஒலி மாசு கூட கிடையாது. விபத்துகள் குறையும். இன்று, பைக்கால் ஏற்படும் விபத்துகள் அதிகம்.

அதுபோல, பெட்ரோலும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கெல்லாம், இ- - பைக் முக்கிய தீர்வாக இருக்கும். இ - பைக், ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும். பராமரிப்பு நன்றாக இருந்தால், 10 ஆண்டுகள் கூட வரும்.


நடுவழியில் பெட்ரோல் போடலாம்; ஆனால், 'சார்ஜ்' தீர்ந்தால் என்ன செய்வது?



இப்போது வருகிற, இ- - பைக்கில், இது போன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டுள்ளனர். 'பேட்டரி பேக்கப்'தகவல், 'டிஸ்பிளே'வில் தெரியும். பேட்டரி சக்தி குறையும் போது, வேகமும் படிப்படியாக குறையும். அதற்கேற்ப, நம் பயணத்தை திட்டமிடலாம்.பேட்டரியை தனியாக கழற்றி, வீட்டுக்குள் வைத்து சார்ஜ் செய்யலாம். நான்கு மணி நேரம் சார்ஜ் போட்டால், 2 யூனிட் தான் செலவாகும்.பெட்ரோல் நிலையம் போலவே, இ- - பைக் சார்ஜ் செய்வதற்கும், நிலையங்கள் நிறைய வருகின்றன.


இ - பைக்குக்கான வரவேற்பு எப்படி உள்ளது?

மிக குறைந்த நேரத்தில், அதாவது, 15 நிமிடத்தில் முழுவதும், சார்ஜ் ஆகக்கூடிய, இ- - பைக் வர உள்ளது. அப்போது, இதன் தேவை, சென்னையில் அதிகரிக்கும்.மணிக்கு, 100 கி.மீ.,க்கு மேல் வேகம் போகக்கூடிய வாகனங்களை விற்பனைக்கு விட, 'டி.வி.எஸ்., ஹோண்டா' உள்ளிட்ட பல நிறுவனங்கள் தயாராக உள்ளன. சில நிபந்தனைகள், அரசிடம் நிலுவையில் உள்ளன. அவை தீர்ந்தபின், இ- - பைக்குக்கு வரவேற்பு அதிகமாகும்.


உங்களுடைய தற்போதைய முயற்சி என்ன?



உங்களிடம் உள்ள சைக்கிள் அல்லது பைக்கை, குறைந்த செலவில், இ -- பைக்காக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளோம். சைக்கிளுக்கான பணியை முடித்து விட்டோம்.


சென்னை நகர சாலைகளை, இ- - பைக் சமாளிக்குமா?



சாதாரண பைக்கில் உள்ள அனைத்து வசதிகளும், இ- - பைக்கில் உள்ளன. பெட்ரோலுக்கு பதில் மின்சாரம் அவ்வளவு தான். சோலாருக்கு மானியம் இருப்பது போல், இ- - பைக்குக்கும் மானியம் தந்தால், வரவேற்பு இன்னும் அதிகமாகும்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X