போலீசாரை தாக்கி கொள்ளையர்கள் ஓட்டம்

Added : டிச 04, 2019
Advertisement

தானே: மஹாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்திலுள்ள, கசாராவின் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர், சாந்தாராம் மஹலே, நேற்று முன்தினம், மும்பை - நாசிக் நெடுஞ்சாலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, மூன்று திருடகள், ஒரு வேனில் தப்பிச் செல்வதாக, சாந்தாராமுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, கொள்ளையர்களுடன் வந்த வேன், நிற்காமல் வேகமாக சென்றது. சாந்தாராம் மஹலே, அதை விரட்டிச் சென்றார்.தகவல் அறிந்து ஷிரோல் போலீசார், வேனை தடுத்து நிறுத்தினர். இதற்குள்,சப்-இன்ஸ்பெக்டர் சாந்தாராமும் அங்கு வந்தார். வேனில் இருந்த இறங்கிய மூன்று கொள்ளையர்களும், சாந்தாராமையும், போலீசாரையும் தாக்கினர்.

சாந்தராம் சுட்டதில் கொள்ளையன் ஒருவன் காயம் அடைந்தார்; மற்ற இருவரும் தப்பியோடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கணவனை கொன்றுபெண் பலாத்காரம்அஜம்கர்: உத்தர பிரதேச மாநிலம், அஜம்கரில், ஒரு வீட்டில், தங்களின், 10 வயது மகள், 7 வயது மகன், மற்றும் கைக்குழந்தையுடன், தம்பதியினர் துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் ஜன்னலை உடைத்து, ஒருவர் உள்ளே நுழைந்தார்.துாங்கிக் கொண்டிருந்த கணவனை, செங்கலால் அடித்துக் கொன்றார்.

விழித்துக் கொண்ட மனைவி மற்றம் மூன்று குழந்தைகளை சரமாரியாக அடித்தார். இதில் கைகுழந்தை இறந்தது. மற்ற மூன்று பேரும் மயக்கம் அடைந்தனர். இதில், தாயையும், 10 வயது மகளையும், அவர் பலாத்காரம் செய்தார். இதை மொபைலில் வீடியோ பதிவு செய்து, அங்கிருந்து தப்பிச் சென்றார்.தகவல் அறிந்து போலீசார் வந்த போது, கணவன், மனைவி, கைக்குழந்தை இறந்தது தெரிந்தது. மகளையும், மகனையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது பற்றி விசாரித்த போலீசார், நசீருதீன் என்பவரை கைது செய்தனர்.பலாத்காரம் செய்து பெண் சுட்டுக் கொலைபக்சர்; பீஹார் மாநிலம் பக்சரில், ஒரு புதரில், பெண் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசார் விரைந்து, வந்து அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,பரிசோதனையில், அந்தப் பெண், பலாத்காரம் செய்யப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளது தெரிந்தது.

இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.குடும்பத்துடன் ஐவர் தற்கொலைகடன் தொல்லை காரணமா?காஸியாபாத்:உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்தவர் குல்ஷன். இவரது மனைவி பெயர் பிரவீன். இவர்களுக்கு, 17 மற்றும் 11 வயதில் மகள் மற்றும் மகன் இருந்தனர். இவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில், இவர்களுடன், சஞ்சனா என்ற பெண்ணும் வசித்து வந்தார்.

இந்நிலையில், தனது மகன் மற்றும் மகளுக்கு, விஷ ஊசி போட்டு கொன்ற குல்ஷன், தனது மனைவி மற்றும் சஞ்சனா என்ற பெண்ணுடன், எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக, இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.ஆஸ்திரேலிய பிரதமர்அடுத்த மாதம் வருகைபுதுடில்லி: ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன், அடுத்த மாதம், இந்தியா வருகிறார்.

இதையொட்டி, இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ செயலர்களின் சந்திப்பு, டில்லியில், வரும் 9ம் தேதி நடக்கிறது. இதில், ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் - பிரதமர் மோடி இடையே நடக்கும் பேச்சில் இடம் பெற வேண்டிய விவகாரங்கள் பற்றி முடிவு செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X