பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை விலகியது மிதமாக பெய்ய வாய்ப்பு

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை : தமிழகம், புதுச்சேரியில் ஒரு வாரமாக பெய்த கனமழை விலகியுள்ளது. 'தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிரமாக பெய்தது.ஒரு வாரமாக நீடித்த கனமழை தற்காலிகமாக விலகியுள்ளது. வரும் நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மாலத்தீவு லட்சத்தீவு பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

தமிழகம் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக குன்னுாரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் 9; தரங்கம்பாடி அண்ணாமலை நகர் 8; பரங்கிப்பேட்டை திருவாடானை 7; அம்பாசமுத்திரம் மணமேல்குடி குடவாசல் மற்றும் வெண்பாவூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X