சம்பவம் செய்தி

தமிழ்நாடு

17 பேர் இறப்புக்கு நிவாரணம் 26 பேருக்கு பகிர்ந்தளிக்க முடிவு

Added : டிச 04, 2019
Advertisement

மேட்டுப்பாளையம் : விபத்தில் இறந்த, 17 பேருக்கான நிவாரண தொகை, 26 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

கோவை மேட்டுப்பாளையம், நடூர் கண்ணப்பன் லே அவுட்டில், காம்பவுண்ட் சுவர் இடிந்து நான்கு வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த, 17 பேர் இறந்தனர். இவர்களுக்கு தமிழக அரசு, தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளது. இந்த தொகையை இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பகிர்ந்து வழங்க உள்ளனர்.சின்னம்மாளின் நிவாரண தொகை, வாரிசுதாரர்களான மகன்கள், மகள் என, ஆறு பேருக்கு வழங்கப்பட உள்ளது.

ருக்மணிக்கான தொகை, கணவர், மகன்களுக்கும், அருக்காணி, ஹரிசுதா, மகாலட்சுமி, ஆனந்தன், நதியா, லோகுராம், அட்சயா ஆகியோருக்கான நிவாரணத் தொகை, அவரது பாட்டி கமலம்மாளுக்கும் வழங்கப்பட உள்ளது.மங்கம்மாளுக்கான நிவாரண தொகை, இவரது சகோதர, சகோதரிக்கும், திலகவதிக்கான நிவாரண தொகை, கணவர், மகன், மகள்களுக்கும், சிவகாமிக்கான நிவாரணத் தொகை கணவர், மகனுக்கும், வைதேகியின் நிவாரணத் தொகை அவரது தந்தைக்கும் வழங்கப்பட உள்ளது.

ஓபியம்மாள் தொகை பேரனுக்கும், நிவேதா, ராமநாதனுக்கான நிவாரணத் தொகை, அவரது தந்தைக்கும், குருசாமிக்கான தொகை, மனைவி, மகன், மகள், தாயாருக்கும் வழங்கப்பட உள்ளது. 17 பேரின் நிவாரணத் தொகை, 26 பேருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X