அரசு நிறுவன விற்பனைக்கு எதிர்ப்பு

Added : டிச 04, 2019
Advertisement

கவுஹாத்தி : நலிவுற்ற அரசு நிறுவனங்களின் விற்பனையை எதிர்த்து, அசாம் சட்டசபை வளாகத்தில், காங்.,எம்.எல்.ஏ., கையை அறுத்து, ரத்தக் கையெழுத்திட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அசாமில், உள்ள நாகோன் அண்டு கேச்சர் பேப்பர் மில்ஸ், பிரம்மபுத்ரா வேலி பெர்டிலைசர் கார்ப்., அல்மாரி மற்றும் அயிலாபரி தேயிலை தோட்டம் ஆகிய பொது துறை நிறுவனங்கள், விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கு, எதிர்கட்சியான காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், காங்., சட்டசபை உறுப்பினரான, ருப்ஜோதி குர்மி, அசாம் சட்டசபை வளாகத்தில், திடீரென தன் உள்ளங்கையை, பிளேடால் அறுத்து, பீறிட்டுக் கிளம்பிய ரத்தத்தில், அரசு நிறுவன எதிர்ப்பு கோஷத்தை எழுதினார்.

இதைக் கண்டு, அங்கிருந்த, சட்டசபை உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் அதிர்ந்தனர். ருப்ஜோதி குர்மி, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவர் கையில் மூன்று தையல்கள் போடப்பட்டன.இவர், பரபரப்பாக எதையாவது செய்து விளம்பரம் தேடுவதில் வல்லவர். சமீபத்தில், வெங்காய விலை உயர்வைக் கண்டித்து, அதை மாலையாக போட்டு, சட்டசபைக்கு வந்தார்.இந்நிலையில், சட்டசபையில், ருப்ஜோதி குர்மி, பிளேடு எடுத்து வந்தது குறித்தும், பாதுகாப்பு குறைபாடு தொடர்பாகவும் விசாரணை நடத்த, சபாநாயகர், ஹிதேஷ் கோஸ்வாமி உத்தரவிட்டுள்ளார்.


பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.,க்கு தடை


அசாமில், காட்டன் பல்கலை., மாணவர் சங்கம், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலை.,யில், பாஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் நுழைய தடை விதித்துள்ளது.இங்கு, கவுஹாத்தி நகரில் உள்ள, காட்டன் பல்கலையில், மாணவர் சங்க பொதுச் செயலர், ராகுல் போர்டோலி, செய்தியாளர்களுடன் பேசியதாவது:பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, குடியுரிமை சட்ட திருத்தம், அசாம் மற்றும் வடகிழக்கு மாநில மக்கள் நலனுக்கு எதிரானது.

அதனால், அந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இப்பிரச்னையில், தனது நிலைப்பாடு குறித்து, முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் பா.ஜ., - எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் மவுனம் காப்பது சரியல்ல.எனவே, பல்கலை.,யில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினர்கள் நுழைய தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X