சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ள பாதிப்பை தெரிவிக்க 24 மணி நேர, 'வாட்ஸ் ஆப்' எண்

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை:சென்னையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு, 22 இடங்களில் மழைநீர் தேங்கியது.சென்னையில், சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதற்காக, மழை வெள்ள பாதிப்பு புகார்களை பெறும் வகையில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, கட்டுப்பாடு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மழை பாதிப்பு புகார்களை தெரிவிக்க, 044 - 2538 4520, 2538 4530, 2538 4540 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இதை தவிர, பொதுமக்கள், புகைப்படம் எடுத்து அனுப்பும் வகையில், 94454 77205 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், கமிஷனர் முதல், அதிகாரிகள் வரை கண்காணிப்பதால், வாட்ஸ் ஆப் எண்ணில் அளிக்கப்படும் புகார்களுக்கு, உடனடி தீர்வு காணப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், சென்னையில், 22 இடங்களில், மழைநீர் தேங்கியது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றினர். அதேபோல், 11 இடங்களில், சாய்ந்த மரங்களையும் அகற்றினர். இந்தாண்டில் மட்டும், மழை காரணமாக, 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X