வங்கிகள் இணைப்பால் வேலை இழப்பு இல்லை

Added : டிச 04, 2019
Advertisement

புதுடில்லி : 'பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டதால், வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது தவறு; எந்தவிதமான வேலை இழப்பும் ஏற்படவில்லை' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபாவில் நேற்று, நிதித் துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:சமீபத்தில், 10 பொதுத் துறை வங்கிகளை இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தவறான தகவல்களை கூறுகின்றனர். எந்தவிதமான வேலை இழப்பும் ஏற்படவில்லை.கோல்கட்டாவை மையமாக வைத்து செயல்பட்ட இரண்டு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம், நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் வங்கி சேவையும், வங்கிகளின் கடன் அளிக்கும் திறனும் அதிகரித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

புதுமைராஜ்யசபாவில் நேற்று, மத்திய சுகாதார அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹர்ஷ் வர்த்தன் கூறியதாவது:தற்கொலை, கொலை மற்றும் விபத்துகளில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும்போது, உள் உறுப்புகளை அறுத்து பரிசோதிக்கும் முறை தற்போது பின்பற்றப்படுகிறது. இதற்கு பதிலாக, மாற்று நடைமுறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.டில்லி எய்ம்ஸ் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த நிபுணர்கள், 'ஸ்கேன்' தொழில்நுட்பம் மூலம், பிரேத பரிசோதனை செய்யும் நடைமுறையை செயல்படுத்துவது குறித்து, ஆய்வு செய்து வருகின்றனர்.

அடுத்த ஆறு மாதங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், மாற்று தொழில்நுட்ப நடைமுறைப்படி உடல்களை பரிசோதிக்கும், முதல் தெற்காசிய நாடாக இந்தியா விளங்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X