பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தை பாதுகாப்பு செவிலியர்களுக்கு விழிப்புணர்வு

Added : டிச 04, 2019
Share
Advertisement
சென்னை:பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து, 100க்கும் மேற்பட்ட செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.'பெண் குழந்தைகளை காப்போம்; கற்பிப்போம்' என்ற திட்டம், மத்திய அரசால், அறிமுகப் படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்பது குறித்த, இரண்டு நாள் விழிப்புணர்வு கூட்டம்,
 பெண் குழந்தை பாதுகாப்பு செவிலியர்களுக்கு விழிப்புணர்வு

சென்னை:பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து, 100க்கும் மேற்பட்ட செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

'பெண் குழந்தைகளை காப்போம்; கற்பிப்போம்' என்ற திட்டம், மத்திய அரசால், அறிமுகப் படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்பது குறித்த, இரண்டு நாள் விழிப்புணர்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று துவங்கியது.

இதில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி கற்பித்தல், பாலியல் குற்றங்களை தடுத்தல், கட்டணமில்லா தொலைபேசி எண்களின் பயன்பாடுகள் ஆகியவை குறித்து, 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது.மேலும், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X