'காங்., கூட்டணி ஆட்சியில் முதல்வர் பதவி விற்பனை'

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (6+ 12)
Advertisement
PM,Modi,மோடி,பிரதமர்,BJP,காங்., கூட்டணி ஆட்சி, முதல்வர் பதவி, விற்பனை

ஜம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில், காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடந்த போது, முதல்வர் பதவி விற்பனைக்குள்ளானது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

ஜார்க்கண்ட், சட்டசபை தேர்தல், ஐந்து கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல், நவ., 30ல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல், 7ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநிலத்தில், தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இங்குள்ள, ஜம்ஷெட்பூரில் நேற்று நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

அப்போது, அவர் பேசியதாவது: ஜார்க்கண்டில், காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடந்த போது, முதல்வர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர். வானிலையில் கூட, அந்தளவு மாற்றம் ஏற்பட்டிருக்காது. காங்., கூட்டணி ஆட்சியில், முதல்வர் பதவி விற்பனைக்குள்ளானது. தங்கள் சுயநலத்துக்காக, அந்த கட்சிகள், முதல்வர்களை மாற்றின. அவர்களில் பலர் இப்போது, ஊழல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.

மாநிலத்தில், பா.ஜ., ஆட்சி அமைந்த பின் தான், நிலையான ஆட்சி ஏற்பட்டது. மாநிலத்தில், ஐந்து ஆண்டாக, ஒரே முதல்வர் பணியாற்றி வருகிறார். மாநிலம், வளர்ச்சி பாதையில் செல்ல துவங்கியுள்ளது. ஜம்ஷெட்பூர், தொழில் நிறுவனங்களின் பூமி; தொழிலாளர்களின் பூமி. சர்வதேச அளவில், இந்தியாவின் பெருமையை உயர்த்தியதில், ஜம்ஷெட்பூருக்கு பெரும் பங்கு உள்ளது.

வனவாசத்துக்கு ராமபிரான் சென்ற போது, அவர் இளவரசர் ராமனாக தான் இருந்தார். ஆனால், 14 ஆண்டுகள், பழங்குடியின மக்களுடன் பழகிய பின், 'மரியாதை புருஷோத்த ராமன்' என அழைக்கப்பட்டார். ராமருக்கு கலாச்சாரத்தை, பண்பை கற்றுக் கொடுத்தது, பழங்குடியின மக்கள்தான். பல ஆண்டுகளாக தீர்க்கப்பட்ட அயோத்தி பிரச்னைக்கு, சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், ஜம்மு - காஷ்மீர், வளர்ச்சிப் பாதையில் செல்ல துவங்கியுள்ளது. அந்த யூனியன் பிரதேசத்தின் கவர்னராக, பழங்குடியினத்தை சேர்ந்த முர்மு உள்ளார். மாநிலத்தை நக்சல்கள் பிடியிலிருந்து, ரகுபர்தாஸ் அரசு மீட்டுள்ளது. பா.ஜ.,வுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை, மக்கள் அளிப்பார்கள் என்பது நிச்சயம். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvam - Chennai,இந்தியா
04-டிச-201920:55:57 IST Report Abuse
selvam மராத்தியில் இவுங்க யாவாரம் பண்ண முயற்சி செய்து அசிங்க பட்டது அவ்வளவு சீக்கிரம் மறந்து போச்சு போலும் .. :). :) :) வெட்கமில்லாமல் பொய் சொல்வது எப்பிடின்னு இவுங்க கிட்டேதான் கத்துக்கணும் ...
Rate this:
Share this comment
Cancel
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
04-டிச-201913:06:09 IST Report Abuse
தோலுரிப்பவன் உண்மையில் இதை இவர் சொல்லலாமா இவர் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் உள்ள MLA அனைவரும் காங்கிரஸ் காரங்கள் தான் ஆட்சி எங்களது அனால் ஆள் காங்கிரஸ் காரன் , நள்ளிரவில் அஜித் பவர்க்கு துணை முதல்வர் யார் கொடுத்து அசிங்கப்பட்டு போனது யார் மோடி ஷா வோட SHA CHANAKIYA OPERATION புஸ் என்று போனதை அன்னான் வசதிக்கு மறந்து விட்டார்
Rate this:
Share this comment
Cancel
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
04-டிச-201910:54:51 IST Report Abuse
தஞ்சை மன்னர் மகாராஷ்டிரா மகாராஷ்டிரா மகாராஷ்டிரா சித்த அப்புக்கு சொல்லுங்கப்பா யாரு யாரு யாரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X